எழுத்­தா­ளர் ஜெய­மோ­கன் உரை

தேசிய கவிதை விழாவின் தமிழ் நிகழ்ச்­சி­கள் ஜூலை 31ஆம் தேதி, ஞாயிற்­றுக்­கிழமை, காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையில் லசால் கலைக் கல்­லூ­ரி­யில் (Cr­e­a­ti­ve Cube) நடை­பெ­றும். 'சிங்கப்­பூ­ரின் கவிதைச் சாலை' என்ற தலைப்­பில் இசை, நட­னம், கவிதைப் படைப்­பு­டன் நிகழ்ச்சி தொடங்­கும். தொடர்ந்து ஆங்­கி­லம், தமிழ், சீனம், மலாய் மொழி­களில் 'இன்று கவிதை' பற்றிய உரைகள் இடம்­பெ­றும். கவிதையை வாசித்து உணர்ந்து அனு­ப­விப்­பது குறித்து எழுத்­தா­ளர் ஜெய­மோ­கன் உரை ஆற்­று­வார்.

அடுத்து, வெற்றி பெற்ற கவிதை­கள் பற்றிய உரை­யா­டல், கவி­ய­ரங்கம் இடம்­பெ­றும். கவிதை வாசிப்பு, நூல் அறி­ மு­கங்களு­டன் கவிதை விழாவின் நிறைவு விழா ஞாயி­றுக்­கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை லசால் கலைக் ­கல்­லூ­ரி­யில் நடை­பெ­றும். இதில் கவிதை நூல்களை வெளியிட விரும்­பு­ப­வர்­கள் தேசிய கவிதை விழா அமைப்பைத் தொடர்­பு­கொள்­ள­லாம். சிங்கப்­பூ­ரின் தேசிய மொழிக் கவிதை­களை மக்­களி­டம் பிர­ப­ல­மாக்­கு­வ­து­டன் நான்கு மொழி கவி­ஞர்­களுக்­கிடை­யே­யான அறி­மு­கத்தை­யும் ஏற்­படுத்­தும் நோக்கில் நடை­பெ­றும் கவிதை விழா நிகழ்ச்­சி­கள் அனைத்­துக்­கும் அனுமதி இல­வ­சம். எனினும் பெயர்­களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!