மனம் மயக்கும் மொரி‌ஷியஸ் தீவு

முஹம்­மது ஃபைரோஸ்

மொரி‌ஷியஸ் தீவைப் படைத்துவிட்டு, அதன் சாயலில் சொர்க்கத்தை இறைவன் படைத்தான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கின்றனர் அந் நாட்டு மக்கள். இயற்கை எழில் கொஞ்சும் இந்தத் தீவு மிக அழ­கா­னது. அழகிய கடல் பார்ப்போரை மெய் மறக்கச் செய்யும் வனப்புடையது. மிகவும் தெளிவான தண்ணீர் கொண்ட கடலின் அற்புதமான கரை மிகவும் சுத்­த­மா­க­வும் அழ­கா­க­வும் பேணிக்காக்கப்படுகிறது. தென்­கிழக்கு ஆப்­பி­ரிக்க கண்டத்­தி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 2,000 கிலோ­மீட்­டர் தூரத்­தில் இந்­தி­யப் பெருங்க­ட­லில் மட­கஸ்­கர் என்ற பெரிய தீவுக்கு அருகே அமைந்­துள்­ள அழகிய சிறிய தீவு மொரி­‌ஷி­யஸ். உலக வரை ­ப­டத்தை உற்று நோக்­கினால்­தான் இந்தச் சிறிய புள்ளியை நாம் காண முடியும்.

தீவின் மொத்த நிலப்­ப­ரப்பு 2,045 சதுர கிலோ­மீட்­டர். அது சிங்கப்­பூ­ரைக் காட்­டி­லும் கிட்­டத்­தட்ட மூன்று மடங்கு பெரி­ய­து. மொரி­‌ஷி­ய­ஸில் தென்­மேற்­குப் பகு­தி­யில் அமைந்­துள்ள 'பிளேக் ரிவர் கார்ஜஸ் பார்க்' என்ற இயற்கை வனப்பு நிறைந்த இடத்­தில் அழகிய அரு­வி­யும் நீர்­வீழ்ச்­சி­யும் உள்ளன.

மொரி‌ஷியஸ் தீவின் 330 கிலோ­மீட்­டர் நீள­முள்ள கட­லோ­ர­மும் எழில் கொஞ்சும் கடற்­கரை­யும் கண்­டு­களிப்­ப­தற்கு அருமை­யான அனு­ப­வத்தைத் தரு­கின்றன. படம்: மொரி‌ஷியஸ் பயணத்துறைக் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!