தாய் வழியில் மகன்

ப. பாலசுப்பிரமணியம்

உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது தேசிய சேவையாளர் அப்துல் ஹாடி ஷாஜஹானின் தாயார் தேசிய தின அணிவகுப்பின் காட்சி அங்கத்தில் பங்கேற்றார். பல ஆண்டுகள் கழித்து, இப்போது தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறும் வாய்ப்பு ஷாஜஹானுக்கும் வந்துவிட்டது. நாளை நடைபெறும் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் சீருடை அணிகளில் சார்ஜண்ட் அப்துல் ஹாடி அங்கம் வகிக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அணியும் ஒன்று. இந்தத் துணை அணிவகுப்பு அணிகளில் ராணுவம், சிங்கப்பூர் குடியரசு கடற்படை, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை, இளையர் சீருடை படை ஆகியவற்றுடன் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

நோன்புப் பண்டிகையின்போது வீட்டிற்கு வந்த அனைவரிடமும், "என் மகன் இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்கிறான். அனைவரும் அணிவகுப்பைக் காணத் தவறாதீர்கள்," என தமது தாயார் பெருமிதத்துடன் கூறியதை அப்துல் ஹாடி நினைவுகூர்ந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!