தமிழருக்காக, தமிழரால் ‘தமிழன்டா’ கைபேசிச் செயலி

'தமிழா இது உங்களுக்­காக அமைக்­கப்­பட்ட மேடை. உங்கள் படைப்­பு­களைப் பதி­வேற்­றுங்கள்' என்று வர­வேற்­கிறது 'தமி­ழன்டா' கைபேசி செய­லி­யின் முகப்­புப் பக்கம். தமி­ழர்­களுக்­கா­கத் தமி­ழ­கத்­தி­லேயே உரு­வாக்­கப்­பட்ட ஒரு திறன்பேசிச் சமூக வலைத்­ த­ளம்தான் 'தமி­ழன்டா'. தமிழர்களின் தேவையறிந்து அதற்கு ஏற்ப வடி­வமைக்­கப்­பட்­டி­ருப்­பதே இந்தச் செய­லி­யின் சிறப்பு. படைப்­பு­ல­கம், ரசிகர் மன்றம், தொழில் புதிது, இசை, ருசியோ ருசி, சிரிப்பு, செய்திக் கதம்பம், 'டென்ட்' கொட்டாய், படிப்­பும் வேலையும், உற­வு­கள், ஆன்­மீ­கம், ஆட்டம் (விளை­யாட்டு), அர­சி­யல் பேட்டை, ஆஹா ஆர்­கா­னிக், நம்ம சென்னைடா, நெல்லை வாலா, மதுரை மச்­சான்ஸ் என்று சுமார் 25 பிரி­வு­கள் இந்த வலைத்தளத் தில் இருக்­கின்றன. நமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும். 'லைக்'கிற்குப் பதில் 'விசில்' என்பது போன்ற மண்­ணுக்­கேற்ற வார்த்தை­கள் இத் தளத்தில் புழக்­கத்­தில் இருக்கின்றன.

இதை வடி­வமைத்த சாம் இளங்கோ மதுரையைப் பூர்­வீ­க­மா­கக் கொண்ட­வர். ஐபிஎம் நிறு­வ­னத்­தின் இந்­தி­யத் துணைத் தலை­வ­ராக இருந்த­வர். கடந்த ஆண்டு சிவகாசிக்குச் சென்றபோது பர­வ­லாக அனைவரிடமும் விலை ­மிகுந்த திறன்­பே­சி­கள் இருப்­பதைக் கவ­னித்தார் இளங்கோ. ஆனால், அதனைச் சாதாரண கைபே­சியைப் போலவே பேசு­வதற்­கும் பாடல் கேட்­ப­தற்­கும் காணொளி பார்ப்­ப­தற்­கும், 'வாட்ஸ்அப்' தகவல் பரிமாற்றத்துக்கும் மட்டுமே அவர்­கள் பயன்­படுத்­து­வதை­ அவர் கண்டார். 2016-08-09 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!