‘எச்டிஎல்’ கொழுப்பு கூடினாலும் ஆபத்து

­­­பொ­து­வாக 'எல்­டி­எல்' எனப்­படும் குறைந்த அடர்த்­தி­யுள்ள கொழுப்பு அமி­லங்கள் உடலில் அதி­க­மா­கச் சேர்ந்தால் இத­யத்­துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்­பட்டு பாதிப்பை ஏற்­படுத்­தும் என்ற கருத்து நில­வு­கின்றது. அதே சம­யத்­தில், உடலில் இருக்­கும் 'எச்­டி­எல்' எனப்­படும் உயர்ந்த அடர்த்தி கொழுப்பு அமி­லங்கள் 'எல்­டி­எல்' கொழுப்பை ரத்த நாளங்களில் இருந்து வெளி­யேற்றி கல்­லீ­ர­லுக்கு அனுப்­பும் வேலையைச் செய்­கிறது. இதனால், இத­யத்­தில் அடைப்பு ஏற்­படு­வதைத் தடுக்­கக்­கூ­டிய 'எச்­டி­எல்' கொழுப்பு அமி­லங்கள் உடலில் கூடு­த­லாக இருந்தால் உடல் நலத்­துக்கு உகந்ததே என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால், மிதமான அளவில் இருந்தால் 'எச்­டி­எல்' கொழுப்பு அமி­லங்கள் இத­யத்­துக்கு நன்மை சேர்த்­தா­லும் அவற்­றின் அளவு அதி­க­ரிக்­கும்­போது அவை சிறு­நீ­ரக செய­லி­ழப்­புக்­குக் கார­ண­மாகி உயி­ருக்கு உலை வைப்­ப­தா­கப் புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

மிசௌ­ரி­யில் உள்ள வா‌ஷிங்­டன் மருத்­து­வப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு இதனை உறு­தி­செய்­கிறது. 'எச்­டி­எல்' கொழுப்பு அமி­லங்களின் அளவு, சிறு­நீ­ரக செயல்­பாடு ஆகி­ய­வற்றைத் தொடர்புபடுத்தி அக்டோபர் 2003 முதல் செப்­டம்பர் 2013 வரை 1.7 மில்­லி­யன் பேரிடம் மேற்­கொண்ட ஆய்வின் முடி­வு­கள் அண்மை­யில் வெளி­யி­டப்­பட்­டன. இதன்­படி, மிதமான அளவில் 'எச்­டி­எல்' கொழுப்பு அமி­லங்கள் இருந்தால் அவை இத­யத்தைப் பாது­காப்­ப­தோடு சிறு­நீ­ர­கம் போன்ற பிற உறுப்­பு­களுக்­கும் ஊறு விளை­விப்­ப­தில்லை. ஆனால், குறைவான அல்லது அதி­க­மான அளவில் 'எச்­டி­எல்' கொழுப்பு அமி­லங்கள் உடலில் இருந்தால் இதயம், சிறு­நீ­ர­கம் போன்ற­வற்­றுக்­குப் பாதிப்பை ஏற்­படுத்தி வாழ்­நாளைக் குறைக்­கும் எனக் கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!