அகதிகளாக 50 மில்லியன் சிறார்: யுனிசெஃப் கவலை

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு ­பங்கு சிறு­வர்­கள். ஆனால், அதில் பாதிப்­பேர் அக­தி­க­ளாக இருக்­கின்ற­னர். அனைத்­து­லக அளவில் சுமார் 50 மில்­லி­யன் சிறு­வர்­கள் போர், வன்முறை, துன்­பு­றுத்­தல்­க­ளால் சொந்த ­நா­டு­களில் இருந்து வெளி­யேறி அக­தி­க­ளாக இருக்­கும் அவ­ல­நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனி­செ­ஃப்' அமைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது. அக­தி­க­ளாக வெளி­யே­றிய 10 மில்­லி­யன் சிறு­வர்­க­ளோடு 28 மில்­லி­யன் சிறு­வர்­கள் வன்முறை, துன்­பு­றுத்­தல்­க­ளால் புலம்­பெ­யர்ந்­துள்­ள­னர். அவர்­களில் ஒரு மில்­லி­யன் சிறு­வர்­கள் 'அகதி' என்ற அங்­கீ­கா­ரம்­கூட இல்­லா­மல் அலைந்­து­கொண்­டி­ருக்­கின்ற­னர் என்று அந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

சுமார் 17 மில்­லி­யன் சிறுவர்கள் சொந்த ­நாட்­டுக்கு உள்ளேயே இடம்­பெ­யர்ந்­துள்­ள­னர். கிட்­டத்­தட்ட 20 மில்­லி­யன் சிறுவர்­கள் வன்முறை, துன்­பு­றுத்­தல் கார­ண­மாக வீட்டை­விட்டு வெளி­யே­றி ­உள்­ள­தாக ஐநாவின் அறிக்கை காட்டுகிறது. இந்தச் சிறுவர்­களி­டம் முறையான ஆவ­ணங்களோ, பண வசதியோ இல்­லா­த­தால் எளிதில் பாதிப்­புக்கு உள்­ளா­கக்­கூ­டிய நிலையில் அவர்­கள் இருக்­ கின்ற­னர். இதற்­கிடையே, சொந்த ­நாட்­டி­லி­ருந்து வெளியேறி வேறு நாடு­களுக்­குச் சென்று தஞ்சம் புக 78 நாடு­களில் இருந்து ஒரு லட்­சத்­துக்­கும் மேற்பட்ட சிறு­வர்­கள் விண்­ணப்­பம் செய்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது. 2014ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டுகை­யில் இந்த எண்­ணிக்கை மும்­ம­டங்கு அதிகம்.

ராஃபா எல்லைப்பகுதி வழியாக எகிப்துக்குள் நுழைய இம்மாதம் 3ஆம் தேதி காத்திருந்த பாலஸ்தீனிய சிறுவர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!