கைபேசி கதிர்வீச்சைத் தடுக்கும் புதிய கண்டுபிடிப்பு

கைபேசி போன்ற மின்னணுச் சாதனங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளைத் தடுக்கும் திறன்கொண்ட புதிய வேதிப்பொருள் ஒன்றை தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். கூ ஜோங் மின் தலைமையிலான கொரிய அறிவியல், தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகளும் அமெரிக் காவின் டிரெக்செல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினரும் இணைந்து எம்ஸீன் எனும் வேதிப்பொருளைக் கொண்டு அந்த மின்காந்தக் கதிர்வீச்சுத் தடுப்புப் பொருளைத் தயாரித்துள்ளனர். டைட்டானியம், கார்பன் ஆகிய தனிமங்களால் ஆன இரு பரி மாண வேதிப்பொருள் வகையைச் சேர்ந்ததுதான் இந்த எம்ஸீன். இதன் ஓரடுக்குத் தடிமன் ஒரு நேனோமீட்டர் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கைபேசி, தொலைக்காட்சி, நுண்ணலை அடுப்பு உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களில் இருந்து மின்காந்த அலைகளைத் தடுக்கும் வல்லமை எம்ஸீனுக்கு இருப்பதை அந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த வேதிப்பொருளைத் தயா ரிப்பதும் எளிது, அதற்கான செல வும் குறைவு என்றும் அவர்கள் தெரிவித்தனர். "மின்காந்த அலைகளைத் தடுப்பதற்கு மட்டுமின்றி இன்னும் பல பயன்பாடுகளுக்கும் எம்ஸீனை உபயோகப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்," என்றார் திரு கூ ஜோங் மின். கைபேசி, நுண்ணலை அடுப்பு ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் மூளைக்கட்டி உட்படப் பல பாதிப்புகள் ஏற்படு வதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் இந்தப் புதிய கண்டுபிடிப்பு அவற்றுக்கு விடை தருவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!