வருகிறார் அடுக்குவீட்டு அண்ணாசாமி

முஹம்மது ஃபைரோஸ்

இலக்கியத்திற்காக 2008ஆம் ஆண்டு கலாசாரப் பதக்கம் வென்ற திரு பி.கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவான நாடகம் அடுக்குவீட்டு அண்ணா சாமி. கம்பங்களிலும் மற்ற கிராமப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்த சிங்கப்பூரர்களைப் பொது குடி யிருப்புப் பேட்டைகளில் குடியேற் றும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசாங்கம் கட்டிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) பேட்டை களில் குடியேறிய அனுபவத்தை விவரிக்கும் வகையில் 1960களின் பிற்பகுதியில் எழுதப்பட்ட 52 பாக வானொலி நாடகம் இது.

சமுதாய மேம்பாட்டுக்காக அர சாங்கம் விடுத்த கருப்பொருட் களையும் தகவல்களையும் உள்ள டக்கிய அதே வேளையில், ஆரம்ப கால வீவக பேட்டைகளில் வாழ்ந்து வந்த மனிதர்களின் சுவாரசியமான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் எழுதப்பட்ட இந்நாடகம், 1969 முதல் 1970ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் வானொ லியில் ஒலிபரப்பப்பட்டது. பிரபலமான பொழுதுபோக்கு ஊடகமாகத் தொலைக்காட்சி தலையெடுக்காத காலகட்டத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்களை வானொலி பக்கம் ஈர்த்தது இந்த நாடகம். மிகவும் பிரபலமாக இருந் ததால் 1975-ஆம் மீண்டும் ஒலிபரப் பப்பட்ட அந்த நாடகம், பின் 1985 வரை பலமுறை ஒலிபரப்பானது. இந்த நிலையில், அதன் 2ஆம் பாகம் வெளிவரக் காத்திருக்கிறது.

எங்கே: எஸ்பிளனேட் அரங்கு கூடம் (Esplanade Theatre Studio)

எப்போது: செப்டம்பர் 23 முதல் 25 வரை வெள்ளி - இரவு 8 மணி சனி - பிற்பகல் 3 மணி, இரவு 8 மணி ஞாயிறு-பிற்பகல் 3 மணி நுழைவுச்சீட்டு விலை: $28 (சிஸ்ட்டிக் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்). மேல் விவரங்களுக்கு 63485555 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.sistic.com.sg எனும் இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!