விற்பனைத் திருவிழாவில் பொழுதுபோக்கு அம்சங்கள்

பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் புத்தாடைகளையும் ஆடை அணிகலன்களையும் அலங் காரப் பொருட்களையும் வாங்க கடைகடையாக ஏறி இறங்கவேண் டுமே என்று சிலர் கவலைப்படலாம். அந்தக் கவலைகளை எல்லாம் போக்கி, நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும் நோக்கில் 5வது ஆண்டாக நடக்கவுள்ளது 'சிங்கப்பூர் அனைத் துலக இந்தியக் கண்காட்சி (SIIE)' மொத்தம் 158 கடைகள் இடம் பெறும் இந்த விற்பனைத் திரு விழாவை தமிழ் முரசு நாளிதழ், தப்லா ஆங்கில இதழ், டி ஐடியாஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இக்கண்காட்சியில் பொழுது போக்கு, கேளிக்கை அம்சங்களுக் கும் பஞ்சமில்லை. 'லோட்டஸ் கொலாப்' குழுவின் இசை விருந்து, 'அயாஸ் டான்ஸ் அகடெமி' மற்றும் 'என்யுஎஸ் நாச்' ஆகிய குழுக்களின் நடன விருந்து, 'டான்ஸ் எம்பஸி'யின் பாலிவுட் ஸும்பா நடனப் பயிற்சி, 'வியாசா யோகா சிங்கப்பூர்' நடத்தும் யோகா பயிலரங்கு, காயத்ரி மேனனின் ஒப்பனைப் பயிலரங்கு என ஏராளமான அம் சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சிறப்புக் குலுக்கல் பரிசுகளும் காத்திருக்கின்றன. இந்த விற்பனைத் திருவிழா விற்கு வர விரும்பும் பார்வையாளர் கள் www.siiexpo.com எனும் இணையத்தளத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

சிங்கப்பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சி

எங்கே: சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபக் கூடங்கள் 401, 402

எப்போது: செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

'சிங்கப்பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சி'யில் நடன விருந்து படைக்கக் காத்திருக்கும் என்யுஎஸ் நாச் நடனக் குழுவினர். படம்: என்யுஎஸ் நாச் ஃபேஸ்புக் பக்கம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!