விற்பனைத் திருவிழாவில் மக்கள் வெள்ளம்

‘சிங்கப்பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சி’ (SIIE) விற்பனைத் திருவிழாவுவிற்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக வருகை புரிந்த திருமதி யின் சியுவ் சூ, சன்டெக் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் நேற்று முன்தினம் அதிகாரபூர்வ மாகத் தொடங்கிய விற்பனைத் திருவிழாவிற்கு முதல் நாளன்றே தன்னுடைய அக்காவின் புதல்வி யுடன் வந்துவிட்டார்.

“இந்த விற்பனைத் திருவிழா நான் நாட்காட்டியில் குறித்து வைத் துள்ள முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்று. விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்ததைப் போல் இந்தியச் சூழல் நம் அருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இங்கு கிடைக்கிறது,” என்றார் 68 வயது திருமதி யின். “நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த விற்பனைத் திருவிழா ‘எக்ஸ்போ’வில் நடந்தது. இப் போது என் இல்லத்திற்கு அருகில் ‘சன்டெக்’கில் நடைபெறுவதால் மிகவும் வசதியாக உள்ளது,” என் றார் ‘சிட்டி ஸ்குவேர் ரெசிடன்சஸ்’ கூட்டுரிமை வீட்டில் வசிக்கும் இவர். எஃகினால் (ஸ்டீல்) உருவாக் கப்பட்டு கற்களால் அலங்கரிக்கப் பட்ட கைப்பை, மேற்சட்டைகள், காற்சட்டைகள், தோரணங்கள் என கிட்டத்தட்ட $200 மதிப்பி லான பொருட்களைத் தான் வாங் கியதாக இவர் கூறினார்.

 

சிங்கப்பூர் அனைத்துலக
இந்தியக் கண்காட்சி

எங்கே: சன்டெக் சிட்டி மாநாட்டு மைய
கண்காட்சிக் கூடங்கள் 401, 402
எப்போது: செப்டம்பர் 22ஆம் தேதி முதல்
25ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல்
இரவு 10 மணி வரை

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்