சாப்பிட்டவுடன் குளிர்பானம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது

சாப்பிட்டவுடன் குளிர்பானம் உடல் நலத்துக்கு அவ்வளவு நல்ல தில்லை என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். உணவு சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலரிடம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. உணவு சாப்பிடுவதற்கு முன் எவ்வளவு வேண்டுமானலும் தண்ணீர் குடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்வது உடலுக்கு நல்லது.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்து, உண வை அளவாக உட்கொள்ள வைப்பதால், தேவையற்ற கொழுப்பு கள் நம்மை சேராமல் தடுக்கவும் அது உதவுகிறது. உணவு உட்கொண்ட பிறகு குளிர்பானம் போன்றவற்றை குடிப்பது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்புகள் ரத்த நாளங்களில் படியச் செய்யக்கூடும். காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டு, உணவு சாப்பிட்டவுடன் வெதுவெதுப் பான வெந்நீர், கிரீன் டீ போன்றவற்றை அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நாம் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பானம் குடித்தால் உடலில் கொழுப்புகள் உறையலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சாப்பாட்டிற்குப் பின் குளிர்பானம் குடிப்பதால் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்கள் கெட்டியாகி சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சாப்பிட்டவுடன் குளிர்பானம் குடிப்பதால் நெஞ்செரிச்சல், தலைவலி போன்ற நோய்களும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம்முடைய அன்றாட வாழ்க் கையில் உணவுகளைச் சாப்பிடும் போது, சாப்பிட்ட பிறகு குளிர் பானம் குடிப்பதைத் தவிர்த்து, வெதுவெதுப்பான வெந்நீரை அருந்துவது நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்