ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்

சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை என்று கூறப்படுகிறது. காலை உணவினை 11=12 மணிக்கு உண்பதும் மதிய உண வினை 3 மணிக்கும் இரவு உணவினை 11 மணிக்கும் என உண்பவர்கள் பலர் உள்ளனர். தவறான நேரத்தில் உண்பதால் நீரிழிவு நோய் பிரிவு 2 உண்டாக லாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் எடை கூடுவதற்கு இது மிகப்பெரிய காரணமாக இருப்ப தாகவும் கூறப்படுகிறது. இரவில் நேரம் கழித்துச் சாப்பிடுபவர்கள், நடுநிசியில் சாப்பிடுபவர்களின் ஞாபகசக்தி மந்தப்படுகின்றது என்றும் ஆய்வு கள் கூறுகின்றன.

மூன்று நேர உணவு, அவற்றுக்கு இடையே மூன்று சிறு உணவுகள் என்பது பொதுவான உணவு உண்ணும் முறையாகக் கடைபிடிக்கப்படுகின்றது. இதை தான் நம் முன்னோர்கள் கடவுளை வழிபடுவதன் மூலம் கூறி உள்ளார்கள். அதாவது கோயில்களில் நடக்கும் ஆறுகால வழிபாட்டு நேரங்கள், நாம் உணவு உண்ணுவதற்கு ஏற்ற சரியான நேரமாகும். உணவில் பழங்கள், சுண்டல் போன்றவற்றினைச் சிற்றுண்டியாக பயன்படுத்தலாம். முழு தானிய உணவு காய்கறிகள் இவையே முறையான உணவாக பரிந்துரைக்கப்படுகின்றது.

முறையற்ற உணவுப் பழக்கம் உடையவர்களுக்கு உடல் மெலிவதோ கூடுவதோ நன்கு தெரியும். பசி மயக்கம் வரும் வரை சாப்பிடாமல் இருக்கக்கூடாது. பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் உலர் திராட்சை, ஒரு சிறு கப் தயிர் போன்ற ஏதாவது கைவசம் வைத்திருக்கலாம். நமது உணவில் சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்கள் கொண்ட பழங்கள் அல்லது காய்கறிகள் இருக்கவேண்டும். இதனை ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். பரபரவென்று சாப்பிட்டு முடிக்காமல் உண்பதற்கு 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள லாம். 6 முதல் 8 குவளை நீர் பருகுதல் அவசியம். கொழுப்பு இல்லாத சூப் அன்றாட உணவில் இருக்க வேண்டும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை