ஆண் சுரப்பி புற்றுநோயை கட்டுப்படுத்தும் வேப்பிலை

அம்மை நோயின் கடுமையைக் குறைக்கும் மருத்துவ குணம் கொண்ட வேப்பிலைக்கு இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூறு ஆண்டுகளாக முக்கிய இடம் உண்டு. பல்வேறு நோய்களுக்கு மருந் தாகப் பயன்படுத்தப்படும் வேப்பிலை இப்போது உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் ஆண் சுரப்பி புற்றுநோயையும் கட்டுப்படுத் தும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலை கழக யாங் லு லின் மருத்துவப் பள்ளியின் மருந்தியல் துறை இணைப் பேராசிரியர் கௌதம் சேத்தி தலைமையிலான அனைத் துலக ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் வேப்பிலை யின் 'நிம்போலைட்' என்ற வேதிப்பொருள் ஆண் சுரப்பி புற்றுநோய் கட்டியின் அளவை 70 விழுக்காடு வரை குறைக்கிறது. மேலும் புற்றுநோய் கட்டி மற்ற இடங்களுக்குப் பரவுவதை 50 விழுக்காடு வரை கட்டுப்படுத்துவ தாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"வேம்பு வேதிப்பொருள் பல்வேறு புற்றுநோய்களைக் குணப் படுத்தவல்லது என்று கூறப்படு கிறது. ஆனால், ஆண் சுரப்பி புற்று நோயை வேம்பின் வேதிப் பொருள் கட்டுப்படுத்தும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. "இந்த ஆராய்ச்சியில் வேப்ப மரத்தின் வேதிப்பொருள் புற்று நோய் கட்டி வளர்வதைத் தடுக்க வல்லது என்பது கண்டறியப் பட்டுள்ளது," என்றார் இணைப்பேராசிரியர் சேத்தி. 12 வாரங்களுக்கு வேம்பின் 'நிம்போலைட்' வேதிப்பொருளை உட்கொள்வதன் மூலம், ஆண் சுரப்பி புற்றுநோய் கட்டுப்படுத்தப் படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!