சிங்கப்பூர் சிறுவர்களின் உணவில் அதிக இனிப்பு: ஆய்வுக்கு $1மி.

சிங்கப்­பூர் சிறு­வர்­கள் அதிகம் இனிப்பு கலந்த உணவுப் பொருட்­களைச் சாப்­பி­டு­வ­தா­கப் பொதுவான கருத்து நில­வு­கிறது. இனிப்பு சேர்க்­கப்­பட்ட பழச்­சா­று­கள், சுவை­யூட்­டப்­பட்ட பால், கேக் போன்ற­வற்றை அவர்­கள் அதிகம் சாப்­பி­டு­கின்ற­னர். சிங்கப்­பூ­ரில் உள்ள பாலர் பள்­ளி­களில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 427 பள்­ளி­களில் மட்டுமே மூன்று முதல் ஆறு வயது வரை­யி­லான சிறு­வ­ருக்கு அர­சாங்க வழி­காட்டி குறிப்­பி­டும் ஆரோக்­கி­ய­மான உணவு வழங்கப்­படு­வது ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்­திய சோதனை­களில் தெரி­ய­ வந்­துள்­ளது.

இனிப்பு நிறைந்த உணவுப் பொருட்­களை அவர்­கள் உட்­கொள்­வதற்­கும் வளர்ந்த பிறகு அவர்­களுக்கு நீரிழிவு நோய் ஏற்­படு­வதற்­கும் தொடர்­பி­ருக்­க­லாம் என சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சா சுவீ ஹாக் பொது சுகா­தா­ரப் பள்­ளி­யின் தலைவர் சியா கீ செங் அக்கறை தெரி­வித்­ துள்­ளார். சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக் கழகம் நீரிழிவு தொடர்­பான 11 ஆய்­வு­களுக்கு $1 மில்­லி­யன் வெள்ளியை ஒதுக்­கி­யுள்­ள­தாக திரு சியா கூறி­யுள்­ளார். ஆறு வய­துக்­குட்­பட்ட சிறு­வர்­களின் உண வுப் பழக்­கங்கள், அவர்­க­ளது உடற்­ப­ரு­மன், சுகா­தா­ரம் பற்றி அந்த ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­படும். சிங்கப்பூர் அனைத்துலக பொதுச் சுகாதாரக் கருத்­த­ரங்­கில் 25 நாடு­களைச் சேர்ந்த சுமார் 600 ஆய்­வா­ளர்­களிடையே இந்தத் தகவல் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்­டது.

அங் மோ கியோவில் இருக்கும் ‘கார்ப்பி டியம் @ ஐடிஇ’ பாலர் பள்ளியில் ‘கே2’ பயிலும் மாணவர்களுக்கு உணவளித்து உரையாடும் நிலைய மேலாளர் லோர்பெர்ட் டே (இடது).

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிலாண்டுரோனிக்ஸ் பேக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை