தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்காக பேரவை தொடர்ந்து பாடுபடும்

சிங்கப்பூர் அமைப்பான தமிழர் பேரவையின் புதிய தலைவராக திரு வெ.பாண்டியன் பொறுப் பேற்றுள்ளார். தமிழர் பேரவை கடந்த ஞாயிற் றுக்கிழமை நடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின்போது இந்த முடிவை எடுத்தது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழர் பேரவையின் தலைவ ராகப் பொறுப்பு வகித்த டாக்டர் ஆர் தேவேந்திரன் அடுத்த தலை முறை தலைமைத்துவத்துக்கு வழி விடும் வகையில் தமது பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். ஸ்டாம்ஃபோர்ட் பிரஸ் நிறுவனம், MDIS கல்வி நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாக இயக்கு னரும், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மன்றத்தின் தலைவருமான டாக்டர் தேவேந்திரன் தலைமையில் தமிழர் பேரவை கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளது.

டாக்டர் தேவேந்திரனின் தலை மையில் கிட்டத்தட்ட 1000 உறுப் பினர்களையும் 33 இணை அமைப்புகளையும் கொண்ட தமிழர் பேரவை $900,000க்கும் மேற்பட்ட நிதியைப் பெற்றிருப்ப துடன், சிண்டா, நற்பணிப் பேரவை, லிட்டில் இந்திய வர்த்தகர் மற்றும் மரபுடைமைக் கழகம், வளர் தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் குழு போன்ற அமைப்புகளுடன் அணுக்கமாக ஒத்துழைத்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. டாக்டர் தேவேந்திரன் தமிழர் பேரவையின் உடனடி முன்னாள் தலைவர் என்னும் பதவியில் இருந்து, மேலாண்மைக் குழுவிற் குத் தனது ஆதரவையும் ஆலோ சனையையும் தொடர்ந்து வழங்கி வருவார். தமிழர் பேரவையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திரு பாண்டியன், 54, பல ஆண்டுகள் அதன் பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!