மாணவர்களைத் தண்டிப்பதற்குப் பதில் தியானம்

பள்­ளி­களில் பிள்ளை­கள் தவறு செய்­தால் உடனே அவர்­களை வகுப்­பறைக்கு வெளி­யில் அறை ஒன்­றில் தடுத்து வைப்­பார்­கள். இது­தான் நீண்ட நெடுங்கா­ல­மாக உல­கம் முழு­வ­துமுள்ள பள்ளிகள் பின்பற்றும் தண்டிக்கும் முறையாக இருந்து வரு­கிறது. இது­போன்று சிறு­வர்­களைத் தடுத்து வைத்து தண்டனை­ய­ளிப்­ப­தால் ஏதே­னும் பலன் கிட்­டி­யி­ருக்­கிறதா-? இது சரி­யான முறை­தானா என்று எந்த ஒரு பள்­ளி­யும் ஆய்­வு­செய்­த­தில்லை. அந்த முறையை மாற்­று­வ­தற்­கும் முன்­வ­ர­வில்லை. இந்­நிலை­யில் அமெ­ரிக்­கா­வின் பால்­டி­மோ­ரில் உள்ள ஒரு பள்ளி, தவறு செய்­யும் மாண­வனைத் தடுத்து வைக்­கும் இந்த முறையை நீக்கி விட்டு அதற்­குப் பதி­லாக தியான முறையை அறி­மு­கப்­படுத்­தி­யுள்­ளது.

மாண­வர்­கள் தடுத்து வைக்­கப்­படு­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டி­ருந்த அறையை இப்­போது தியான அறை­யாக மாற்­றி­யுள்­ளது அந்தப் பள்ளி. அத்­து­டன் மாண­வர்­கள் ஏன் தவ­றிழைக்­கிறார்­கள் என்­பதை அவர்­களு­டனேயே பேசி ஆலோ­சனை வழங்­கும் ஏற்­பாட்டை­யும் அந்தப் பள்ளி செய்­கிறது. பிள்ளைகளைத் தண்­டிப்­பதைக் காட்­டி­லும் அவர்­களுக்கு நல்வழி காட்­டு­வதே சிறந்த முறை என்­கிறது அந்தப் பள்ளி. அந்தப் பள்­ளி­யில் தியான முறை அறி­மு­கப்­படுத்­தப்­பட்டு இரண்டு ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இப்­போது எந்த ஒரு மாண­வ­னும் தவ­றிழைத்­தற்­கா­கப் பள்­ளியை விட்டு நீக்­கப்­ப­ட­வில்லை. மாண­வர்­களைத் திட்­டு­வது, அவர்­களை பல­ரின் முன்­னிலை­யில் அவ­மா­னப்­படுத்­து­வது போன்ற கொடூ­ர­மான செயல்­கள் அவர்­களின் மன­தில் வாழ்க்கை முழு­தும் நீங்கா வடு­வாக உறுத்­திக்­கொண்­டி­ருக்­கும். எனவே, இது­போன்ற கொடுமை­யான தண்டனை­களை ஒழித்­து­ விட்டு அறி­வுபூர்­வ­மான பய­னுள்ள வகைகளில் அவர்­களைக் கவர்ந்து நல்­வ­ழிக்கு ஈர்க்­கக்­கூ­டிய வழி­முறையைக் கையாள்­வதே சிறந்தது என்­கிறது அந்தப் பள்ளி. இந்த உன்­ன­த­மான வழி­முறையை உல­கத்­தில் இருக்­கும் அனைத்­துப் பள்­ளி­களும் பின்­பற்­றும் கால­மும் வர­லாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!