ஜிஆர்டி அதிர்ஷ்டக் குலுக்கலின் வெற்றியாளர்கள்

முஹம்­மது ஃபைரோஸ்

சிங்கப்­பூ­ரில் இவ்­வாண்டு ஜூலை மாதத்­தில் அதன் முதல் கிளையை திறந்த ‘ஜிஆர்டி ஜுவல்­லர்ஸ்’ நிறு­வ­னம், திறப்பு விழாவை முன்­னிட்டு வாடிக்கை­யா­ளர்­களை ஈர்க்­கும் நோக்கில் சிறப்­புத் தள்­ளு­ப­டியை அறி­வித்­தி­ருந்தது. அதன் ஒரு பகு­தி­யாக, வாடிக்கை­யா­ளர்­கள் தாங்கள் நகை வாங்க செல­விட்ட ஒவ்வொரு $150க்கும் அதிர்ஷ்­டக் குலுக்­கலுக்கான கூப்பனைப் பெற்­ற­னர். அவ்வாறு பெற்ற கூப்­பன்களை ஆயி­ரக்­க­ணக்­கான வாடிக்கை­யா­ளர்­கள் ‘ஷாப் அண்ட் வின்’ அதிர்ஷ்டக் குலுக்­கலுக்­குச் சமர்ப்­பித்­திருந்தனர். இந்­நிலை­யில், சிராங்­கூன் சாலையில் (ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன் கோவில் அருகில்) அமைந்­துள்ள ஜிஆர்டி ஜுவல்­லர்ஸ் நகைக்­கடையில் நேற்று நடை­பெற்ற ‘ஷாப் அண்ட் வின்’ அதிர்ஷ்­டக் குலுக்­க­லில் 106 வெற்­றி­யா­ளர்­கள் தேர்வு செய்­யப்­பட்­ட­னர். அதில் மாபெரும் முதல் பரிசாக அரை கிலோ தங்க ‘திருமண நகை செட்’டை வென்ற அதிர்ஷ்­ட­சா­லியை அறி­வித்­தார் ஜிஆர்டி ஜுவல்­லர்ஸ் விளம்ப­ரப் பிரிவின் துணைத் தலைவர் திரு சி.எஸ். பாலாஜி.

இரண்டாம் பரிசான வைர ‘நெக்லஸ்’ஸை வென்ற ஐந்து வாடிக்கை­யா­ளர்­கள் அறி­விக்­கப்­பட்­ட­னர். மூன்றாம் பரிசான 8 கிராம் தங்கக் காசை 100 வெற்­றி­யா­ளர்­கள் வென்ற­னர். அதிர்ஷ்­டக் குலுக்­க­லில் பரிசை வென்ற வாடிக்கை­யா­ளர்­களை ஜிஆர்டி ஜுவல்­லர்ஸ் தொடர்­பு­ கொண்டு தக­வலைத் தெரி­யப்­ படுத்­தும். 8 கிராம் தங்கக் காசை வென்ற­வர்­கள் அந்­நகைக்­கடைக்கு நேர­டி ­யாக வந்து பரிசைப் பெற்­றுக் ­கொள்­ள­லாம். முதல் மற்றும் இரண்டாம் பரிசை வென்ற­வர்­களுக்கு அப் பரிசை அளிப்பதற்கான சிறப்­புக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்­றுக்கு இம்மா­தம் 21ஆம் தேதி­யன்று ஜிஆர்டி ஜுவல்­லர்ஸ் ஏற்பாடு செய்­துள்­ளது.

ஜிஆர்டி ஜுவல்­லர்ஸ் நகைக்­கடை­யில் நேற்று அதிர்ஷ்­டக் குலுக்­கலை நடத்த அழைக்­கப்­பட்ட பிர­மு­கர்­களு­டன் அந்­நகைக்­கடை­யின் விளம்ப­ரப் பிரிவுத் துணைத் தலைவர் திரு சி.எஸ். பாலாஜி (இடக்­கோடி). படம்: ஜிஆர்டி ஜுவல்­லர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்