இளநீர் மகத்துவம்

நமக்கு இயற்கை அளித்திருக்கும் எண்ணற்ற கொடைகளில் ஒன்று இளநீர். உடல் சூட்டைத் தணிப்பதுடன் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்தாகவும் இளநீர் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் இருப்ப தால், வயிற்றில் சுரக்கும் அமிலத் தால் ஏற்படும் செரிமானம் பிரச்சி னைகள் வராமல் தடுக்கிறது இளநீர். இளநீரில் சர்க்கரைச் சத்துடன் தாதுச்சத்துகளும் நிறைந்து உள்ளன. பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.

இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானதாகக் கூறப்படுகிறது. தினமும் இளநீர் அருந்துவதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமை அடைந்து நம் உடலைத் தாக்கும் தொற்றுக் கிருமிகளைத் தடுத்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் சிறுநீர்ப் பெருக்கிகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் குணப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரகங்களைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை கள் வராமல் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல் பாட்டை மேம்படுத்தி, தைராய்டு சம்பந்தமான பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துகிறது இளநீர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை