சிங்கப்பூரில் கோபிநாத் நடத்தும் கலந்துரையாடல்

வில்சன் சைலஸ்

தன்முனைப்புப் பேச்சாளர், நிகழ்ச்சி நெறியாளர், எழுத்தாளர் எனத் தொடங்கி நடிகராகவும் தற்போது மக்கள் மத்தியில் வலம் வரும் திரு கோபிநாத், (படம்) விஜய் டிவியின் ‘நீயா நானா’ பாணியில் கலந்துரையாடல் நடத்த மீண்டும் சிங்கப்பூர் வந்திருக்கிறார். ‘ஷாபாஸ்’ நிறுவனத்தின் ஏற் பாட்டில் பத்தாவது ஆண்டாக ஏற் பாடு செய்யப்பட்டுள்ள ‘சலாம் இந்தியா’ மாபெரும் குடும்ப விற் பனை விழாவில் எல்லா காலத்துக் கும் ஏற்புடைய தலைப்பில் ஒரு கலந்துரையாடலை கோபிநாத் இன்று வழிநடத்துவார்.

சிங்கப்பூர் எக்ஸ்போ ஹால் 6A மண்டபத்தில் இன்று மாலை நடை பெறவுள்ள விவாத அங்கத்தில் ‘இந்தக் காலத்து பிள்ளைகளுக்குப் பொறுப்பு இல்லை’, ‘இந்தக் காலத்துப் பிள்ளைகள் பெரியவர் களைவிடப் பொறுப்பானவர்கள்’ என்ற தலைப்புகளின் கீழ் வெவ் வேறு தரப்பினர் மோதுவர். ‘இந்தக் காலத்து பிள்ளைகள் எங்கு சரியாக உள்ளனர்,’ என்ற பொதுவான சொல்லாடலிலிருந்து இந்தத் தலைப்பு பிறந்ததை விவ ரித்த திரு கோபிநாத், சாதாரண வாழ்க்கையில் நடைபெறுகின்ற சம்பவங்களே ‘நீயா நானா’ நிகழ்ச் சிக்குத் தலைப்புகளாக அமைகின் றன என்றார். “யாரிடம் தங்கள் கருத்து களைச் சொல்லவேண்டும் என்ப தைத் தீர்மானிக்கும் இன்றைய இளையர்கள், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையத்தளங்களின் மூலம் தெளிவாகத் தைரியமாக அவற்றை முன்வைக்கின்றனர்,” என்றார் அவர்.

‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க’ என்ற தலைப்பில் 2009ஆம் ஆண்டு இவர் வெளி யிட்ட புத்தகம், மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்றது. “நான் பெரிய எழுத்தாளன் அல்ல. பர பரப்பான வாழ்க்கைச் சூழலில் பார்த்து அனுபவித்த விவகாரங் களையே படைக்கிறேன்,” என்ற அவர், மூன்று நாட்களில் இப்புத் தகத்தை எழுதி முடித்ததாகப் பகிர்ந்துகொண்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்