‘ஐபோன் வாங்கினால் வேலை கிடையாது’

சீன நிறு­வ­னம் ஒன்று தன்­னுடைய ஊழி­யர்­கள் ஐபோன் வாங்­கு­வதற்குத் தடை விதித்­துள்­ளது. நன்யாங் யோங்காங் என்ற அந்த மருத்­துவ நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை­யில், தடையை மீறி ஐபோன் 7 வாங்கும் ஊழியர் கள் வேலையை விட்டுச் செல்ல வேண்­டி­ய­து­தான் என்று கூறப்­ பட்­டுள்­ளது. இந்­நி­று­வ­னம் மட்­டு­மல்­லா­மல், மேலும் சில சீன நிறு­வ­னங்களும் தங்க­ளது ஊழி­யர்­கள் ஐபோன் 7 பயன்­படுத்­து­வதற்­குத் தடை விதித்­துள்­ள­தாக பிபிசி செய்திக் குறிப்பு தெரி­விக்­கிறது. இதற்கு அவர்­களின் தேசப்­பற்­றும் தங்க­ளது ஊழி­யர்­கள் உயிரற்ற பொருட்களைச் சார்ந்து வாழ்­வதைத் தவிர்ப்­ப­தும்­தான் நோக்கம் என்றும் கூறப்படுவதாக அந்த செய்திக் குறிப்பு தெரி­விக் ­கிறது. நன்யாங் யோங்காங் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஒருவர் உள்ளூர் செய்தி இணை­யத்­த­ளம் ஒன்­றிற்கு அளித்த பேட்­டி­யில், “தங்க­ளது ஊழி­யர்­கள் அவர் ­க­ளது குடும்பத்­தோடு அதிக நேரம் செல­வ­ழிக்க வேண்டும் என்ற நோக்கமே இதற்கு காரணம்,” என்று கூறினார்.

இதுபோல் ஐபோன் 7 வாங்க தடை விதித்­துள்ள சீன மருத்­து­வ­மனை ஒன்று, தடையை மீறும் ஊழி­யர்­களுக்கு சம்பள உயர்வு கிடையாது என்று கூறி­யுள்­ளது. “நான் வெளி­நாட்டு பொரு­ட்க ளுக்கு எதி­ரா­ன­வன் அல்ல. எனது ஊழி­யர்­கள் தங்களது வச­திக்கு அப்­பாற்­பட்டு, விலை­யுர்ந்த ஐபோன் வாங்­கு­வது பிடிக்க வில்லை. “ஏனென்றால், சிலர் அதற்காக கடன் வாங்­கு­கின்ற­னர். பின்னர் கடனை அடைக்க மிகவும் சிரமப் படுகின்றனர். “இதையெல்லம் தாண்டி ஒரு சிலர் ஐபோன் வாங்­கு­வதற்­காக தங்க­ளது உடல் உறுப்­பு­களை­கூட விற்­று­வி­டு­கின்ற­னர்,” என்று அம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் நிர்வாகி பிபி­சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்­பிட்­டுள்­ளார். 2016ஆம் ஆண்டின் இரண் டாம் காலாண்­டில், சீனாவில் ஆப்பிள் நிறு­வ­னத்­தின் பங்குச் சந்தை 12 விழுக்­காட்­டில் இருந்து 9 விழுக்­கா­டாக சரிந்­துள்­ளது. இதன் காரணமாக சீனாவில் ‘ஹுவேய், ‘ஒப்போ’, ‘விவோ’, ‘சையோமி’ ஆகிய திறன்­பேசி தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் முதல் நான்கு நிலையில் இருக்க, ஆப்பிள் நிறு­வ­னம் ஐந்தா­வது இடத்தையே பிடித்­துள்­ளது.

 

People walk past stores promoting the Apple iPhone 6S in the southern Chinese city of Shenzhen.PHOTO: REUTERS

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிலாண்டுரோனிக்ஸ் பேக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை