முனைவர் ரெ.கார்த்திகேசு காலமானார்

மலே­சி­யா­வின் புகழ்­பெற்ற எழுத்­தா­ள­ரும் கல்­வி­யா­ள­ரு­மான முனைவர் ரெ.கார்த்­தி­கேசு (படம்) நேற்று கால­மானார். ரெ.கா என்று அனை­வ­ரா­லும் மரி­யாதை­யோடு அழைக்­கப்­பட்ட அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அவருக்கு வயது 76. கால­னித்­துவ காலத்­தில் தமிழ் நாட்­டி­லி­ருந்து மலே­சி­யா­வுக்­குக் குடி­பெ­யர்ந்த தமி­ழர்­களின் மூன்றாம் தலை­முறையைச் சேர்ந்த திரு காரத்­தி­கேசு, தோட்­டப்­பு­றத் தமிழ்ப் பள்­ளி­களில் தமிழ்ப் பயின்று பின்னர் ஆங்­கி­ல­மும் மலாயும் கற்றுத் தேர்ந்தார். மலேசிய வானொ­லி­யின் தமிழ்ப் பிரிவில் ஒலி­ப­ரப்­பா­ள­ரா­கப் பணியைத் தொடங்கி அதன் துணைத் தலை­வ­ரா­க­வும் நிர்­வா­கி­யா­க­வும் பணி­யாற்­றினார். அதன் பின்னர் பினாங்­கில் உள்ள மலேசிய அறி­வி­யல் பல்­கலைக் கழ­கத்­தில் பொது­மக்­கள் தொடர்பு ஊடகப் பிரிவில் விரி­வுரை­யா­ள­ரானார். அங்கு ஒலி­ப­ரப்­புத் துறையில் விரி­வுரை­யா­ள­ரா­க­வும் துறைத்­தலை­வ­ரா­க­வும் பேரா­சிரி­ய­ரா­க­வும் பணி­யாற்றி ஓய்வு பெற்றார்.

மலாயாப் பல்­கலைக் கழ­கத்­தில் தவத்­திரு தனி­நா­ய­கம் அடி­க­ளா­ரின் கீழ் 1968ல் இந்திய ஆய்வு இயல் துறையில் இளங்கலைப் பட்­ட­மும் 1977ல் நியூயார்க் கொலம்­பியா பல்­கலைக் கழ­கத்­தில் பத்­தி­ரிகைத் துறையில் முது­கலைப்­பட்­ட­மும் 1991ல் இங்­கி­லாந்­தின் லெஸ்டர் பல்­கலைக் கழ­கத்­தில் பொதுமக்கள் தொடர்­புத் துறையில் முனைவர் பட்­ட­மும் பெற்­ற­வர் திரு கார்த்­தி­கேசு. 12 வயது முதலே தமிழில் எழுத ஆரம்­பித்த ரெ.கா மலே­சி­யா­வின் முன்னணி எழுத்­தா­ளர். தமிழ்­நாட்­டில் கணையாழி, தீராநதி, இந்தியா டுடே, கல்கி ஆகிய இதழ்­களில் சிறு­கதை­களும் விமர்­ச­னக் கட்­டுரை­களும் எழு­தி­ய­வர். தம்­முடைய படைப்­புக்­களுக்­காக மலே­சி­யா­வி­லும் தமிழ்­நாட்­டி­லும் பல பரி­சு­களை வென்­றுள்­ளார். ஐந்து சிறு­கதைத் தொகுப்­பு­கள், ஐந்து நாவல்­கள், இரண்டு விமர்­ச­னக் கட்டுரை நூல்கள் ஆகிய 12 நூல்களை அவர் எழு­தி­யுள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!