‘பிளேஸ்டேஷனு’க்கான சோனியின் புதிய மெய்நிகர்க் கருவி

சோனி நிறுவனம் சென்ற 13ஆம் தேதி 'பிளேஸ்டேஷன் விஆர்' என்றழைக்கப்படும் மெய்நிகர்க் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளேஸ்டேஷன்-4ஐ விளையாட்டுச் சாதனைத்தைப் பயன்படுத்துவோர் இந்த மெய்நிகர்க் கருவியைக் கண்களில் மாட்டிக்கொண்டு விளை யாடலாம். கணினி அல்லது தொலைக்காட்சித் திரையில் காட்சிப்படுத்தப்படும் விளையாட்டில், கதைமாந்தர்களுடன் சேர்ந்து விளையாடுவதைப்போன்ற உணர்வை விளையாடுபவர்களுக்கு இந்தக் கருவி அளிக்கும்.

இதன் விலை US$399. வீடியோ, ஆடியோ, இயக்கப்பெட்டி ஆகியவற்றுடன் சேர்த்து US$499க்கு இந்த 'விஆர் ஹெட்செட்' விற்கப்படுகிறது. உங்களிடம் ஏற்கெனவே மெய்நிகர்க்கருவிக்கான புகைப் படக்கருவியும் மோஷன் கன்ட்ரோலர்களும் இருந்தால் நீங்கள் US$399 விலைக்குக் கிடைக்கும் விஆர் ஹெட்செட்டை வாங்கலாம். இதில் 'பேட்டல்ஸே„ன்', 'டிரைவ்கிளப் விஆர்' போன்ற 8 விளையாட்டுகளுக்கான மாதிரிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

ஏற்கெனவே சந்தையில் உள்ள 'ஹெச்டிசி' நிறுவனத்தின் ஹெட்செட்டுகளான 'ரிஃப்ட்', 'வைஃப்' போன்ற கருவிகளால் 2டி விளையாட்டுகளை விளையாட முடியும். அத்துடன் அவை கணினிகளில் விளையாடப்படும் விளையாட்டுகளுக்கெனவே செய்யப்பட்டவை. ஆனால் சோனியின் புதிய தயாரிப்பான 'பிளேஸ்டேஷன் விஆர்' மெய்நிகர்க்கருவி 'பிளேஸ்டேஷன் 4'க்கான விளையாட்டுகளை விளையாடுவதோடு கணினி களில் மட்டுமல்லாமல் 'ஹெச்டிஎம்ஐ' உள்ள தொலைக்காட்சி சாதனங்களிலும் விளையாடலாம். அத்துடன் 'ஹெச்டி டிவி'களிலும் இந்த விஆர் ஹெட்செட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!