நடனம் வழி மனநோய் பற்றிய விழிப்புணர்வு

சுதாஸகி ராமன்

மனநோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டு வர 'சுய மரியாதையைத் தேடி' (Finding Dignity) எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி சிங்கப்பூர் கலைப் பள்ளியின் நாடக அரங்கில் நடைபெற இருக்கிறது. நோயாளிகளுக்கு அவர்களது குடும்பத்தாரின் ஆதரவுதான் பெரும்பாலும் தேவைப்படுகிறது என்ற தகவலை இந்த நடன நிகழ்ச்சி முன்வைக்கிறது. இந்த நடன நிகழ்ச்சிக்கு லலிதா வெங்கட சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார். மூத்த நடன கலைஞர் வீரப்பன் பாலகிருஷ்ணனின் பாடல்வரி களுக்கு இசையமைத்துப் பாட இருக்கிறார் சுதா ரகுராமன். அஜித் பாஸ்கர் தாஸ் வடிவமைத்துள்ள இந்த நடன நிகழ்ச்சியைச் சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு நடனப் பள்ளி களிலிருந்து வரும் ஆறு நடன மணிகள் மேடையேற்றுகின்றனர்.

இந்த அறுவரில் மனநல மருத்துவராகப் பயிற்சி பெற்று வரும் 32 வயது தேவப்பிரியா அப்பனும் ஒருவர். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்படும் நிலையைக் கண்டு இவர் ஆதங்கப்படுகிறார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டி லிருந்து மனநலக் கழகத்தில் பயிற்சி பெற்று வருகிறார். சிகிச்சை பெற அங்கு வந்த நோயாளிகளோடு பேசி பழகிய தேவப்பிரியா மனநல நோய்களைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டார். அப்போது நோயாளிகளுக்கு உதவ அவருக்கு இருந்த ஆர்வம் மேலோங்கியது. மனநல நோய்கள் குறித்து மக்களிடையே தேவப்பிரியா விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார். இதற்கு கடந்த 26 ஆண்டுகளாகக் அவர் கற்று வந்த பரதநாட்டிய நடனக்கலை அவருக்கு உதவியது.

மனநல மருத்துவத் துறையில் தேவப்பிரியாவுக்கு இருக்கும் ஈடுபாடும் பரதக்கலையில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் இந்த நாட்டிய நிகழ்ச்சியில் சங்கமிக்க இருக்கிறது. "சமூகத்தில் மனநல நோய்களால் பாதிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளதை மனநல கழகத்தில் நான் சேர்ந்தபோது அறிந்துகொண்டேன். இந்தப் படைப்பிற்காகக் குணமடைந் துவரும் நோயாளிகளோடு பேசி அவர்கள் எழுதிய நூல்களைப் படித்து அவர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்ள முயன்றேன்," என்றார் தேவப்பிரியா.

'சுய மரியாதையைத் தேடி' (Finding Dignity) எனும் நாட்டிய நிகழ்ச்சியில் தாயார் கதாபாத்திரத்தில் திருமதி லலிதா வெங்கடசுப்பிரமணியன் (இடது). 'ஸ்கிட்ஸே„ஃப்ரேனியா' எனும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள மகள் கதாபாத்திரத்தில் குமாரி தேவப்பிரியா அப்பன் (வலது). மனநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொணர இந்த நடன நிகழ்ச்சி மேடையேற்றப்படுகிறது. படம்: லிஜேஷ் கருணாகரன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!