நம்பிக்கை சிதையாத பெண்கள்

அமிலவீச்சுக்கு ஆளான பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திவரும் உணவகத்திற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் ஆக்ராவில் தாஜ்மகால் அருகே ‘‌ஷீரோஸ்’ என்ற பெயரில் இரண்டு அடுக்கு உணவகம் ஒன்று உள்ளது. அழகிய வேலைப்பாடுகளும் அமைதியும் இசையும் தவழும் இந்த உணவகத்தில் தங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தையே சந்தித்த பெண்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். அவர் களின் முகம் சிதைந்து போயிருந் தாலும் தன்னம்பிக்கை சிதைய வில்லை. இந்த உணவகத்தில் பணி யாற்றும் அத்தனை பெண்களும் அமிலவீச்சால் முகம் கருகிப் போனவர்கள்.

ஆனால் அவர்களின் வாழ்க்கை கருகிப் போகாமல் இருக்க தற்போது இந்த உணவகம்தான் உதவியாக இருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த சாயா அறக்கட்டளை அமிலவீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் இது போன்ற உணவகம் நடத்தும் யோசனையை வழங்கி அதற்கான நிதியுதவி யும் அளித்தது. இந்த உணவகத்தின் உணவுப் பட்டியலில் விலை இருப்பதில்லை. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய பணத்தைத் தரலாம் என உணவகம் நடத்துபவர்கள் கூறுவதுடன் மக்கள் நிம்மதியாக இங்கு வந்து சிரித்துப் பேசிக் கொண்டே உணவருந்த வேண் டும் என்பதுதான் எங்கள் குறிக் கோள் எனக் கூறுகின்றனர்.

‘‌ஷீரோஸ்’ உணவகத்தில் பணிபுரியும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள். படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்