பெற்றோரின் அருமையை சங்கீதாவுக்கு உணர்த்திய சம்பவம்

வில்சன் சைலஸ்

வாழ்க்கையின் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள பக்கபலமாக இருந்த குடும்பத் தாருடன் வெற்றிக் கனிகளைச் சுவைத்த வண்ணம் தீபாவளியை இன்று உற்சாகத்துடன் கொண் டாடுகிறார் 23 வயது சங்கீதா ரகு. நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தில் முதல் வகுப்பு ஹானர்ஸுடன் பொறியியல் கல்வி முடித்தது, பிடித்தமான துறையில் வேலை கிடைத்தது, சிண்டாவின் உன்னத விருதை 3வது முறையாக அதுவும் பிரதமரின் கைகளில் இருந்து பெற்றது ஆகியவை சங்கீதாவின் தீபாவளிக் கொண் டாட்டத்தை இவ்வாண்டு இன்னும் சிறப்பானதாக மாற்றியுள்ளன.

வாழ்க்கையில் இந்த நல்ல நிலையை எட்டுவதற்கு கை கொடுத்து உதவிய சங்கீதாவின் பெற்றோர், மோசமான சூழலிலும் துணிச்சல் தூண்களாகத் திகழ்ந்து அவரது முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளனர். மூன்றாண்டு களுக்குமுன் இதே தீபாவளிக் கொண்டாட்டம் சங்கீதாவிற்கு அதிர்ச்சியில் முடிந்தது. அக்டோபர் 2013. தீபாவளிக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் சங்கீதாவின் கழுத்து எலும்புப் பகுதியில் ஒரு கட்டி உருவானது. 'என்ன கட்டி இது' என்பதைத் தெரிந்துகொள்ள தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையில் பெற்றோருடன் பரிசோத னைக்குச் சென்றார் அவர்.

சாதாரண கட்டியாகத்தான் இருக்கும் எனப் பரிசோதனை களுக்குப் பின் வீடு திரும்பிய சங்கீதா, குடும்பத்தினர், நண்பர் களுடன் அவ்வாண்டு தீபாவளியை மகிழ்ச்சியுடன் கழித்தார். தீபாவளி முடிந்து மூன்றாவது நாள். பரிசோதனைகளின் முடிவுக ளைத் தெரிந்துகொள்ள மருத்துவ மனைக்குத் தம் பெற்றோருடன் சென்றிருந்த சங்கீதாவிற்கு 'ஹாட்ஜ்கின்ஸ் லிம்ஃபோமா' என்ற புற்றுநோய் கண்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சந்தேகித் தனர்.

மூன்றாண்டுகளுக்குமுன் தீபாவளி முடிந்து மூன்றாம் நாள் சங்கீதாவுக்கு (இடமிருந்து 2வது) அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. 'ஹாட்ஜ்கின்ஸ் லிம்ஃபோமா' எனும் புற்று நோயால் அவர் பாதிக்கப் பட்டிருந்ததை மருத்துவச் சோதனைகள் உறுதி செய்தன. ஆயினும் தந்தை ரகு, தாயார் திருமதி பரமேஸ்வரி (வலது), சகோதரி விவ்யா பாரதி ஆகியோரின் நம்பிக்கை மொழிகளாலும் ஆதரவாலும் இன்று அந்த நோயிலிருந்து முழுமையாக விடுபட்டு குடும்பத்தாருடன் சேர்ந்து தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயத்தமாகி விட்டார் சங்கீதா. படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!