பிரம்மாண்டமான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா

இந்த ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பெயர் பெற்ற வெளிநாட்டு எழுத்தாளர்கள் பலர் பங்கேற்பதுடன் அகதிகள் பிரச்சினை போன்ற முக்கிய உலகப் பிரச்சினைகளும் அலசப்பட உளள்ன. வரும் வெள்ளிக்கிழமை 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த 10 நாள் விழாவில் விருது பெற்ற வெளிநாட்டு எழுத்தாளர்களான அமெரிக்காவின் லைனல் ‌ஷிவர், பனாமா ஆவனங்களை வெளிப்படுத்த உதவிய ஜெர்மனின் பிரபல பத்திரிகையாளர் ஃபெட்ரிக் ஒபமயர், பிரபல மங்கா தொடரை உருவாக்கிய ஜப்பானின் கோஷோ அயோமா, இந்தோனீசியாவின் எகா குர்னியவான் போன்றோருடன் பிரபல உள்ளூர் எழுத்தாளர்கள் உட்பட சுமார் 330 பேர் பங்கேற்கின்றனர்.

தமிழ் நிகழ்ச்சிகளில் ஈழத்து எழுத்தாளர் ஷோபாசக்தி, தமிழகத் தின் முக்கிய இலக்கிய ஆய்வா ளரும் நாடகக்கலைஞருமான அ.மங்கை, மலேசியாவின் வளர்ந்து வரும் கவிஞரும் இலக்கியவாதியுமான பூங்குழலி வீரன் ஆகியோருடன் உள்ளூரின் பிரபல எழுத்தாளர்கள் இராம. கண்ணபிரான், பொன். சுந்தரராசு, அ.கி.வரதராஜன், சித்ரா ரமேஷ், மாதங்கி கிருஷ்ணமூர்த்தி, முகமது காசிம் ஷா நவாஸ், நெப்போலியன், லதா, மலர்விழி இளங்கோவன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். மொத்தம் 140 கட்டண நிகழ்ச்சிகளுடன் இலவச நிகழ்ச்சிகளும் உண்டு.

எழுத்தாளர் விழாவில் பங்கேற்கவுள்ள உள்ளூர் எழுத்தாளர் இராம கண்ணபிரான், தமிழக எழுத்தாளர் அ.மங்கை, ஈழத்து எழுத்தாளர் ஷோபாசக்தி. படங்கள்: இணையம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்