சிறப்பு நாடகப் பயிலரங்கு

எழுத்தாளர் விழாவில் சிறப்புப் பயிலரங்குகளில் ஒன்றாக ‘ஏட்டி லிருந்து மேடைக்கு’ இடம் பெறுகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்கறியப்பட்ட மொழிபெயர்ப் பாளர், எழுத்தாளர், நாடகக் கலைஞரான அ. மங்கை இந்தப் பயிலரங்கை நடத்துகிறார். டாக்டர் V பத்மா என்ற இயற்பெயர் கொண்ட அ. மங்கை முப்பது ஆண்டுகளாக தமிழ் நாடகத்துறையில் முன்னணியில் உள்ளவர். மங்கையின் தமிழ் நாடகம் சார்பான கட்டுரைகள் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்திய நாடகங் கள் குறித்த கையேட்டிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நடிகர்கள், நடிப்புக் குறித்த கலையகராதி யிலும் இடம்பெற்றுள்ளன.

நாள்: 12/11/2016 சனிக் கிழமை, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை

இடம்: இந்திய மரபுடைமை நிலையம்

பயிலரங்கிற்கு அனுமதி இலவசம். எனினும் முன்பதிவு செய்வது அவசியம். nhb_ihc@ nhb.gov.sg

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்