லிட்டில் இந்தியாவின் வரலாறு கூறும் மூன்று குறும்படங்கள்

வில்சன் சைலஸ்

லிட்டில் இந்தியா வரலாற்றின் ஒரு பகுதியைக் கண்முன் நிறுத்தியது உள்ளூர் பிரபல இயக்குநர் திரு. கே. ராஜகோபாலின் குறும்படங்கள். ‘அந்த நாள்’, ‘நான் இழந்த’, ‘என் நிழல்’ ஆகிய மூன்று குறும்படங்கள் ரேஸ் கோர்ஸ் சாலை, கேம்பல் லேன், சையது ஆல்வி சாலை ஆகியவற்றின் பின்னணியை எடுத்துரைக்கின் றன.

இந்தியர்களில் பெரும்பாலோர் அடிக்கடி சென்று வரும் இந்த மூன்று முக்கிய சாலைகள் குறித்த சுவாரசியமான தகவல்களைத் தமது குறும்படங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்றுள்ளார் திரு ராஜகோபால். இந்திய மரபுடைமை நிலையத் தின் ஆதரவுடன் உண்மை சம்ப வங்களுடன் கொஞ்சம் கற்பனை யையும் சேர்த்து குறும்படங்களைத் தயாரித்துள்ளதாக தெரிவித்த இவரின் குறும்படங்கள், கடந்த வியாழக்கிழமை ‘ரெக்ஸ்’ திரையரங்கில் திரையிடப்பட்டன. சீனர், வெளிநாட்டினர், சிறியோர், பெரியோர் எனப் பலதரப்பினரும் குறும்படங்களைக் காண திரையரங்கின் முன் ஒரு மணி நேரத்திற்கு முன்பே திரளத் தொடங்கினர். அவர்களுள் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர்.

ரெக்ஸ் திரையரங்கில் குறும்படங்கள் வெளியிடப்பட்டபோது இயக்குநர் ராஜகோபாலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயரும் திரையரங்கின் உரிமையாளர் நாராயணசாமியும். படம்: இந்திய மரபுடைமை நிலையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை