மனநல விழிப்புணர்வு கலந்துரையாடல்

வில்சன் சைலஸ்

உடல்நலத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உள்ளத்தைப் பேணுவதற்கும் கொடுக்கவேண் டும் என்ற அடிப்படையில் மனநலம் குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா கடைக் காரர்கள், மரபுடைமை சங்கம். மன அழுத்தம், கவலை, மது விற்கு அடிமையாகுதல் ஆகிய மனநலம் தொடர்பான பிரச்சி னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதும் கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்படும்.

‘மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி’ என்ற தலைப்பில் லிஷாவுடன் மனநலக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கலந்துரையாடல் இம்மாதம் 13ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் காலை 10 மணியிலிருந்து நடை பெறும். பொதுமக்களுக்கு அனு மதி இலவசம்.

மாறிவரும் உலகப் பொருளி யலால் பலருக்கும் எதிர்காலம் தேதி: 13 நவம்பர் 2016, ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 முதல் மதியம் 1 வரை இடம்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம் அனுமதி: இலவசம் பற்றிய கவலை இருக்கலாம் என் றும் எவ்வாறு இச்சூழலைச் சமாளிக்கலாம் என்பதைக் கலந்து ரையாடலின் மூலம் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார் லிஷாவின் தலைவர் திரு ராஜ்குமார்.

கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புவோர் நவம்பர் 11ஆம் தேதிக்குள் events@ lisha.org.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல் விவரங்களுக்கு 6392 2246 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம் அல்லது 9147 9085 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம். wsilas@sph.com.sg

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை