14ஆம் தேதி ‘சூப்பர் மூன்’ அரிய நிகழ்வைப் பார்க்கலாம்

‘சூப்பர் மூன்’ எனப்படும் பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வு 70 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அனைத்துலக விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “பூமிக்கு மிக அருகில் நிலவானது காட்சியளிப்பதைத் தான் ‘சூப்பர் மூன்’ என்கிறோம். “அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும் மிகப் பெரியதாகவும் தோற்றமளிக்கும். “இந்த நிகழ்வானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதாகும். இந்த ‘சூப்பர் மூன்’ கடந்த 1948ஆம் ஆண்டு தோன் றியது. அதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் காட்சியளிக்க உள்ளது. நிலவானது பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை