நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உணவே மருந்தாகலாம்

நீரிழிவு நோய் எனும் சர்க்கரை நோயானது ஓர் அழையாத விருந் தாளி. தனக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என விரும் பும் விருந்தாளி. அந்நோய் வந்துவிட்டால் அதை குணப்படுத்தும் சாத்தியம் மிகக் குறைவு என்றாலும் காலம் முழு வதும் அதைக் கட்டுக்குள் வைத் திருக்க தகுந்த மருத்துவ, உணவு முறைகளைக் கடைப்பிடிப்பதே சிறந்த வழி. இந்நிலையில், ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றிய வாறு அந்நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன் கூடிய விரை வில் அதிலிருந்து விடுபட முடியும் எனும் திடமான நம்பிக்கையில் உள்ளார் 80 வயது திருமதி மாலதி ராமன்.

65 வயதில் ‘இன்சுலின்’ ஊசி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நீரிழிவு நோய்க்கு ஆளானார் இவர். பதினைந்து ஆண்டுகள் வேளை தவறாமல் மாத்திரைகள் உட்கொண்டதால் இவரது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தது. 65 வயதில் இவர் ‘இன்ஸுலின்’ ஊசி போட்டுக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. பாகற்காய் சாறு, வெந்தயம் எடுத்துக் கொண்டும் பெரிதும் பயன் இல்லையே என கவலைப் பட்டார் திருமதி மாலதி.

பருப்புச் சாறு, ‘சாலட்’, காய்கறிச் சாறு, தயிர் உள்ளிட்ட ஆரோக்கிய தினசரி உணவு வகைகளை உட்கொண்டு ஆரோக்கியத்துடன் வாழும் திருமதி மாலதி ராமன். படம்: திருமதி ஸ்ரீவித்யா

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை