‘தேறலின் தூறல்’ நூல் வெளியீடு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னைய செயலாளரும் துணைத் தலைவருமான கவிஞர் பாத்தேறல் இளமாறனின் (படம்) ‘தேறலின் தூறல்’ கவிதைத் தொகுப் பின் வெளியீட்டு விழா நாளை 03.12.2016 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை 95, சையது ஆல்வி சாலையில் உள்ள ஆனந்த பவன் உணவகத்தின் 2வது மாடியில் நடைபெறும்.

எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் தலைமையில் நடைபெறும் வெளியீட்டு விழாவில் கழகத்தின் மதியுரைஞர் முனைவர் சுப.திண்ணப்பன், நாகை திரு. தங்க ராசு, திரு. ஜோதி. மாணிக்கவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர். கவிஞர் கி. கோவிந்தராசு வாழ்த்துப் பா பாடுவார். பாத்தேறல் இளமாறனின் ஏற்புரைக்குப் பிறகு இரவு உணவு வழங்கப்படும். இந்த நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி எழுத்தாளர் கழகமும் பாத்தேறல் இளமாறனும் அன்புடன் அழைக்கின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிலாண்டுரோனிக்ஸ் பேக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை