‘பேலியோ’ உணவு முறை

பேலியோ உணவு முறை என்பதற்கு ஆதி மனிதனின் உணவுப் பழக் கம் என்ற பெயரும் உண்டு. பேலியோ உணவு முறையில் பால், சீனி, பதப்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகள் உப்பு, அல்கஹால், காப்பி போன்ற உணவு வகை களைத் தவிர்க்கப்படுகின்றன. அவற்றுக்குப் பதிலாகக் காய்கறி கள், பழங்கள், கடலை வகைகள், இறைச்சி வகைகள் போன்றவை சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. கொழுப்பை முதன்மையாகக் கொண்ட உணவு முறைதான் பேலியோ உணவு முறை. பேலியோ உணவின் சிறப்பு உணவில் மாவுச்சத்துடைக் குறைத்துவிட்டு, கொழுப்பையும் புரதத்தையும் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதுவே, பேலியோ டயட். மாவுச்சத்து குறை வது ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கிறது. அதனால் இன்சுலின் சுரப்பு குறைகிறது. இப்போது நம் உடலுக்குச் சக்தி வேண்டும். உண்ணும் கொழுப்பிலிருந்து தனக்குத் தேவையான சக்தியை உடல் முதலில் எடுத்துக்கொள்கிறது. மெல்ல மெல்ல தனக்குத் தேவைப்படும் கூடுதல் சக்தியை, உடலில் ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள கொழுப்பிலிருந்து எடுக்கத் தொடங்குகிறது. விளைவு, எடை குறைகிறது. ரத்தத்தில் சர்க்கரை குறைவதால் ரத்த அழுத்தம் குறைகிறது, மெல்ல சர்க்கரையும் கட்டுப் பாட்டுக்குள் வருகிறது. உடலில் சக்தியின் அளவு கூடி விடுகிறது. சர்க்கரை கொடுத்த சோர்வு, மந்தம் விலகுகிறது. இன்சுலின் ரெஸிஸ்ட் தன்மை அதிகமான பசியை உருவாக்கும். காரணம், செல்களுக்கு சக்தி வேண்டும்,

நாம் இதற்குத் தீனியாகப் பழக்கிவைத்துள்ள சக்தி= சர்க்கரை. உணவின் மூலம் உடம்புக்குச் சர்க்கரை கிடைக்கும். ஆனால், இன்சுலின் ரெஸிஸ்ட் சர்க்கரையை செல்களில் கொண்டுபோய்ச் சேர்க்காது. அதனால் செல்கள் சோர்வ டைகின்றன; மூளை மந்தமாகிறது. சக்தி வேண்டும் என செல்கள் மூளைக்குத் தகவல் அனுப்பிக் கொண்டே இருக்க, மூளை நமக்குப் பசியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. பேலியோ உணவு முறையில், நம் உடலில் உள்ள கொழுப்பிலிருந்தே செல்கள் சக்தியை எடுத்துக்கொள்வதால், பசி குறைகிறது. மந்தமும் குறைகிறது. நம் உடலும் விசையுறு பந்தினைப்போல உற்சாகமாகி விடுகிறது. பேலியோ உணவுப் பழக்கத்தை 1972ஆம் ஆண்டில் அமெரிக்கா வில் பிரபலபடுத்தியவர் மருத்துவர் ராபர்ட் அட்கின்ஸ். ஆரோக்கிய நிலையை மேம்படுத்த இந்த பேலியோ உணவு முறை ஊக்கு விக்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!