கதைக்களத்தில் எழுத்தாளர் செ.ப.பன்னீர்செல்வம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழுவும் இணைந்து நடத்தும் பிப்ரவரி மாதக் கதைக்களம், பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு, 21 கிளோஸ்டர் சாலையில் அமைந்து உள்ள பெக் கியோ சமூக மன்றத் தில் நடக்கவுள்ளது. இதில் எழுத் தாளர் திரு. செ.ப.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

மார்ச் மாத கதைக்களம் போட் டிக்குக் கதைகளும் கதை விமர் சனங்களும் வரவேற்கப்படுகின் றன. சிறுகதைக்கான தொடக்க வரி, "எங்களுக்கு இடையே ஏற் பட்டிருப்பது காதலாயிருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற் பட்டது!". இந்தத் தொடக்கவரியைக் கொண்டு 250லிருந்து 300 சொற் களுக்குள் கதைகளை எழுதி அனுப்பவேண்டும். அதேபோல், பிடித்தமான ஒரு சிறுகதையைப் பற்றி 250லிருந்து 300 சொற் களுக்குள் விமர்சனம் எழுதி அனுப்பலாம். இவற்றை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: aavanna19@gmail.com அல்லது rvairamr@gmail.com. கடைசி நாள் பிப்ரவரி 28. சிறந்த மூன்று கதைகளுக்கும் இரண்டு விமர்சனங்களுக்கும் ரொக்கப் பரிசும் புத்தகப் பரிசும் உண்டு. மேல் விவரங்களுக்குத் திரு இராம. வயிரவனைத் (93860497) தொடர்புகொள்ளலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!