அனுப்பிய செய்தியை திரும்பப் பெறும் வசதி

ஒருவருக்கு அனுப்ப வேண்டிய குறுஞ்செய்தியைத் தவறுதலாக இன்னொருவருக்கு அனுப்பிவிட் டால் அதைவிட தர்மசங்கடமான நிலை வேறு இருக்கமுடியாது. 'வாட்ஸ்அப்' சமூக ஊடகம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய அம்சத்தின் மூலம் இனி அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம். அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் திரும்பப் பெறவும் அதில் எழுத்துப்பிழை இருந்தால் மாற்றம் செய்யவும் ஏதுவாக விரைவில் வெளியிடப்படவுள்ள வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புதிய வசதிகள் இடம்பெற இருக்கின்றன. செய்தியைத் திரும்பப் பெறவும் திருத்தவும் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படுமா என்ற விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், இந்த வசதிகள் தானாகவே 'எனேபில்' செய்யப்பட் டிருக்கவில்லை என்று @WABeta info எனும் டுவிட்டர் கணக்கு தெரிவித்துள்ளது. அனுப்பிய குறுஞ்செய்தியைத் திரும்பப் பெறும் பட்சத்தில் அந்தச் செய்தி அப்படியே நமது திறன் பேசிக்கு வராது என்றும் மாறாக 'Message recalled', அதாவது 'செய்தி திரும்பப் பெறப்பட்டது' என்ற செய்தி திரையில் தோன்றும்.

'ஸ்டேட்டஸ் டேப்'பில் இருந்து ஸ்டேட்டஸை அழிக்கும் வசதியும் அறிமுகமாகவிருக்கிறது. அண் மைய பீட்டா பதிப்பில் இந்த வசதி யும் 'எனேபில்' செய்யப்படவில்லை என்றும் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு வரும்போது இவ்வசதி கள் 'எனேபில்' செய்யப்பட்டிருக்க லாம் என்றும் கூறப்படுகிறது. வாட்ஸ்அப் 2.17.1 பதிப்பைக் கொண்டுள்ள ஐஃபோன் வாடிக் கையாளர்கள் புதிய 'அப்டேட்'டைப் பதிவிறக்கம் செய்து புதிய வசதி களைப் பெறலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!