இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்குக் கட்டுரை அனுப்பும் தேதி இம்மாத இறுதிவரை நீட்டிப்பு

சென்னையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கும் மாநாட்டு மலருக்கும் கட்டுரை அனுப்புவதற்கான தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குமுன் அந்தத் தேதி 15.04.2017 என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வரும் ஜூன் மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

அந்த மாநாட்டில் பங்குபெற விரும்புவோர் அதற்குரிய படிவத்தை நிரப்பி உடனடியாக மாநாட்டின் சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளரான திரு சுப. அருணாசலத்திற்கு subaaruna98 @gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும். அவரை 93221138 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். www.singaporetamilwriters. com, www.wtwc2.com ஆகிய இரு இணையத் தளங்களிலிருந்து படிவங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். எழுத்தாளர் கழகக் குழு ஜூன் மாதம் 8ஆம் தேதி காலையில் இங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்லத் திட்டமிட்டுள்ளது. 12 அல்லது 13ஆம் தேதி திரும்பலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!