செல்வ வளம் தரும் அட்சய திருதியை

அட்சய திருதியை நாளில் ஏழை, எளியோருக்குத் தானம் செய்தால் அதற்கான புண்ணியம் பன் மடங்காகப் பெருகி நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பது ஐதீகம். 'அட்சய' என்ற சொல் லுக்கு அழிவின்றி வளர்வது என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்வரும் மூன்றாம் பிறை நாள் (திருதியை) அட்சய திருதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வரு கிறது. இந்த நாளில் தான தர்மங்கள் செய்தால் குறைவின்றி வாழ லாம் என்பது முன்னோர் வாக்கு. அட்சய திருதியைக்குத் தங்கம்தான் வாங்கவேண்டும் என்பதில்லை. உப்பு, மஞ்சள், பச்சரிசி, நவதானியம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏழைகளுக் குத் தானம் அளிக்கலாம். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை.

அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமின்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள், சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, பூசையறையில் உபயோகப் படுத்தும் புனிதமான பொருட்கள், அகல் விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக் கேற்ப வாங்கி வைக்கலாம். அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப் பான பலனைத் தரும். மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற் கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.

தவிர, திருதியை அன்றைக்குத் திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும். அப்படி திதி கொடுக்கும் போது வாழைக் காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்து திதி கொடுக்கலாம். அதுவும் ஒரு வகையான தானம் தான். அதாவது மந்திரங்கள், வேதங்கள் படிப்பவர்களை மதித்து தானம் தருவது. இதுபோன்றுதான் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!