தமிழ் மொழியில் காதல், நட்பு

ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்

ஒளவையார் அதியமானின் நட்பாக இருக்கட்டும் அல்லது தலைவன் தலைவியின் காதலாக இருக் கட்டும், நமது தமிழ் இலக்கியத்தை அலசி ஆராய்ந்தால், நட்பும் காதலும் வீரமும் தமிழ் மொழியில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன என்பதில் ஐயமில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 1 மணி முதல் 4.30 மணி வரை லிஷா மகளிர் அணி 4ஆம் முறையாக வழிநடத்திய ‘தமிழில் நட்பும் காதலும்’ எனும் நிகழ்ச்சி, பாடல்கள் மூலமாகவும் விவாத மன்றத்தின் மூலமாகவும் தமிழில் எவ்வாறு நட்பும் காதலும் அழகாக சித்திரிக்கப்படுகின்றன என்பதை அலசி ஆராய்ந்தது. ‘தமிழா தமிழா’ என்னும் திரைப்படப் பாடலின் வரிகள் மாற்றப்பட்டு, தமிழர்களாகிய நாம் தமிழை என்றுமே மறக்கக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் அங்கத்தில் பாடல்கள் வழி காதல் கதை ஒன்று மேடையேற்றப்பட்டது. அதனை முனைவர் மன்னார்குடி ஜி ராஜகோபாலன், பரசுராம் குழு வினர் வழிநடத்தினர்.

நிகழ்ச்சி படைப்பாளர்களில் ஒருவருக்கு நினைவுப் பரிசை வழங்கும் ஆர். ராஜாராம். உடன் லிஷா மகளிர் அணித் தலைவி திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லி. படம்: லிஷா