களைகட்டிய 2வது மரபுடைமை விழா

வில்சன் சைலஸ்

சிங்கப்பூர் மரபுடைமை விழாவை முன்னிட்டு லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் உள்ள இந்திய மரபுடைமை நிலையம் கொண்டாட் டங்களால் நேற்று உயிர்பெற்றது. 'டமாரு' எனும் தாளக் குழு வினரின் துடிப்புமிக்க தாளங் களுடன் தொடங்கிய விழா, வெவ் வேறு பரிணாமங்களில் வளர்ந் துள்ள ராமாயணத்தின் அங்கங் களைக் கண்முன் நிறுத்தியது. 'ஸ்ரீ வாரிசான் சொம்' எனும் தென்கிழக்காசிய அமைப்பின் 'வாயான் குலிட்' நிழல் கூத்து, 'பாஸ்கர்ஸ்' கலை கழகத்தின் தெருக்கூத்து, இந்திய இசையுடன் இணைந்து இசை படைத்த 'கமெலான் அஸ்மரதனா' எனும் இந்தோனீசிய இசைக் குழுவின் அங்கம் ஆகியவை பாரம்பரிய முறையில் ராமாயணத்தை வர் ணித்தன.

ஒரே இடத்தில் பல்வேறு கலா சாரங்களின் கலைப் படைப்பு களைக் காண நிகழ்ச்சி நேற்று வாய்ப்பளித்தது. கேம்பல் லேனில் நடைபெற்ற விழாவில் பலரும் ஆங்காங்கே நின்று நிகழ்ச்சி களைக் கண்டு களித்தனர். விழாவை முன்னிட்டு மாங்காய் வடிவிலான அழகிய கோலங்களும் பந்தலின் உட்கூரையில் தொங்கும் பல ரக சேலைகளும் நிகழ்ச்சிக்கு மேலும் அழகு சேர்த்தன.

கேம்பல் லேனில் சிங்கப்பூர் மரபுடைமை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பாஸ்கர்ஸ் கலை கழகத்தினர் ராமாயணம் தொடர்பான தெருக்கூத்து நிகழ்த்தி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். படம்: இந்திய மரபுடைமை நிலையம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!