‘என் சிறுகதை அனுபவங்கள்’

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழுவும் இணைந்து படைக்கும் மே மாத கதைக்களம் இன்று மாலை 4.00 மணிக்கு 21 கிளவ் செஸ்டர் சாலையில் (GLOU CESTER ROAD) அமைந்துள்ள பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெறுகிறது. கதைக்களத்தில் வள்ளல் திரு. ஜோதி மாணிக்கம் அவர்கள் "என் சிறுகதை அனுபவங்கள்!" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். மே மாதக் கதைக்களத்திற்குக் கதைகளும் விமர்சனங்களும் வந் துள்ளன என்று எழுத்தாளர் கழகம் தெரிவித்தது. மேலும் ஜூன் மாதக் கதைக்களம் போட் டிக்கு கதைகளும் கதை விமர் சனங்களும் வரவேற்கப்படு கின்றன என்றும் அது கூறியது. ஜூன் மாதக் கதைக்களத்துக் கான தொடக்கவரி "அன்று அந்தப் பேச்சாளர் 'மனிதனின் ஆயுள் ஒரு நொடிதான், அதனால் நொடி நொடியாக வாழுங்கள்' என்று சொன்னது என் நெஞ் சுக்குள் நின்று நிலைத்து விட் டது," என்பதாகும். இந்தத் தொடக்க வரியில் ஆரம்பித்து 250லிருந்து 300 வார்த்தைகளுக் குள் கதைகளை எழுதி அனுப் புங்கள்.

அதேபோல் உங்களுக்குப் பிடித்த ஒரு சிறுகதையைப் பற்றி 250லிருந்து 300 வார்த்தைகளுக் குள் விமர்சனம் எழுதி அனுப் புங்கள். கதைகளையும், விமர்சனங் களையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி aavanna19@gmail.com, rvairamr@gmail.com. கதைகளை மே 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!