சுடச் சுடச் செய்திகள்

தீர்மானங்களுடன் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

உலகமெங்கும் வாழும் தமிழ் எழுத் தாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு அமைந்தது. இம்மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட மாநாட்டில் சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்தி ரேலியா, கனடா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். சிங்கப்பூரின் சார்பில் முனைவர் சுப. திண்ணப்பன், திரு. பொன். சுந்தரராசு, திரு. நா. ஆண்டியப்பன், முனைவர் சீதாலட்சுமி, முனைவர் கோட்டி திருமுருகானந்தம், ஆசி ரியர்களான திரு விக்டர், திரு. வீர. கணேசன், திருமதி கிருத்திகா, முனைவர் தேன்மொழி, திரு. எஸ்.என்.வி. நாராயணன், மாணவர் விக்ரம் வீரபாண்டியன் ஆகியோர் கட்டுரை படைத்தனர்.

சிங்கப்பூர் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் சுப. அருணாசலம் ஆகியோர் ஆளுக்கு ஓர் அமர்வில் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வெளிநாடுகளில் தமிழில் எழு தவும் பேசவும் முடியாத நிலையில் இருக்கும் தமிழ் வம்சாவளியின ருக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற் கான முயற்சியில் சில அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன. அவற்றுக்கு முறையான வழி காட்டுதலும் ஆதரவும் தமிழகத் திலிருந்து தரப்படவில்லை என்பது குறையாக மாநாட்டில் முன்வைக் கப்பட்டது. அயலகத் தமிழ் எழுத்தாளர் களின் படைப்புகளுக்கும் ஊடகங் களில் வாய்ப்பளிப்பது, அயலகத் தமிழ் எழுத்தாளர் களின் படைப்புகளையும் தமிழக நூலகங்களில் இடம்பெறச் செய்வது, அயலகத் தமிழ் எழுத்தாளர் களையும் தமிழக அரசு விருது கொடுத்துக் கௌரவிப்பது என்பன போன்ற சில கோரிக்கை களும் மாநாட்டில் முன்வைக்கப்பட்டன.

மாநாடு முடிந்த ஒரு வாரத் திற்குள் தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தமிழைத் தரணியெங்கும் கொண்டுசெல்லும் தொலைநோக் குத் திட்டங்களையும் அறிவித்துள் ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுவாழ் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள் வதற்கு உதவியாகத் தமிழ் பாடப் புத்தகங்களை அனுப்பி வைப்பது, தமிழகத்திலிருந்து தமிழாசிரியர் களை அனுப்பி அங்குள்ள ஆசிரி யர்களுக்குப் பயிற்சி அளிப்பது, இணையத்தளம் வாயிலாகத் தமிழ் கற்றுத்தருவது, அரிய நூல்களை பொதுமக்களிடமிருந்து திரட்டி வெளிநாட்டுத் தமிழ் நூலகங் களுக்கு அனுப்புவது போன்றவை அந்தத் திட்டங்களில் சில. மூன்றாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு மலேசியாவில் நடைபெறும்.

மாநாட்டின் போது மேடையில் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன், மலேசிய அமைச்சர் எம். சரவணன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ. ராஜேந்திரன். படம்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon