சிங்கப்பூர் இலக்கியம் குறித்து மாலன் உரை

தமிழகத்தின் பிரபல பத்திரிகை யாளரும் எழுத்தாளருமான திரு மாலன் சிங்கப்பூர் தமிழ் இலக் கியத்தின் தனிக்குரல்கள் பற்றி வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு பேசுவார். லீ கோங் சியான் ஆய்வாளரான மாலன் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். “தனிக் குரல்கள்: மாறுபட்ட சிந்தனை களை முன்வைக்கும் தமிழ்ப் படைப்புகள் மீதான பார்வையும் அயல்மொழி படைப்புகள் பற்றிய குறிப்புகளும்” என்ற தலைப்பில் அவர் பேசுகிறார். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.