சுடச் சுடச் செய்திகள்

ஆர்ச்சர்ட் ஹோட்டலில் இன்று அனைத்துலக ஆயுர்வேத மாநாடு

இந்திய அரசாங்கம், சிங்கப்பூருக் கான இந்திய தூதரகம், ஆயுர் வேத மருத்துவர்கள் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இரண் டாம் அனைத்துலக ஆயுர்வேத மாநாட்டை இன்று நடத்தவுள்ளன. ஆர்ச்சர்ட் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்தியாவில் கடந்த சுமார் 2,000 ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சை முறையை மேற் கொண்டு பல நோய்களை மருத் துவர்கள் குணப்படுத்தி உள்ள னர். இன்றும் இந்த சிகிச்சை முறை உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலை 9 மணி அளவில் தொடங்கும் இந்த மாநாட்டில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கலந்துகொண்டு சிங்கப்பூரர் களின் சுகாதாரத் தேவைகளைப் பற்றி உரையாற்ற உள்ளனர்.

கேள்வி பதில் அங்கம், கலந்துரையாடல்கள் ஆகிய வற்றின் மூலம் பங்கேற்பாளர்கள் ஆயுர்வேத சிகிச்சை முறையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள லாம். கல்வி, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செய லாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம், புக்கிட் பாத்தோக் தனித்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களோடு சேர்ந்து சிங்கப்பூருக்கான இந்திய தூதர் திரு ஜாவிட் அஷ்ராஃபும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். ஆயுர்வேத மாநாட்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள www. ayurvedicpractitioners.org என்ற இணையத்தளத்தை நாடலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon