ஆசிய யோகாசனப் போட்டிகள்

காலாங் சமூக மன்றத்தில் இம்மாதம் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஏழாவது ஆசிய யோகா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் தொடர்பில் அனைத்து வயதினருக்குமான யோகாசனப் போட்டிகள் நடைபெறும். 29ஆம் தேதி ஆசிய யோகா பட்டயக் கல்விக்கான தேர்வுகள் நடைபெறும். போட்டிகளின் இறுதி நாளான 30ஆம் தேதி கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை ஹேவ்லாக் ரோட்டில் இருக்கும் யோகா ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் அமைப்பு நடத்துகிறது. இதுகுறித்த மேல் விவரங்களுக்கு www.yogasports.sg என்ற இணையப் பக்கத்தை நாடலாம். மேல் விவரங்களுக்கு 8700 6645 என்ற எண்களில் அல்லது singaporeyogasports@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Loading...
Load next