சுடச் சுடச் செய்திகள்

தமிழர் உறவைப் பறைசாற்றிய ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’

மா.பிரெமிக்கா

சிங்கப்பூர் இந்திய நாடகம் மற்றும் குறும்படம் ஆர்வலர்கள் குழு (சிட்ஃபி), இம்மாதம் 20, 21, 22ஆம் தேதிகளில், 400க்கு மேற் பட்ட பார்வையாளர்கள் முன்னிலை யில், ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’ எனும் நாடகத்தை நான்கு காட்சி களாக குட்மன் கலை நிலையத்தில் மேடையேற்றியது. பற்பல நாடகங்கள், கவிதைகள், கதைகள் ஆகியவற்றை எழுதி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்துக் கலைக்குப் பெரும் பங்களித்த நமது முன்னோர்களில் ஒருவரான அமரர் சே.வெ.சண்முகம் இயற் றிய நாடகம் தான் ‘சிங்கப்பூர் மாப் பிள்ளை’.

அன்று தமிழ் வானொலியில் இடம்பெற்ற இந்த நாடகம் இன்று ‘ஜிசிஇ’ தமிழ் மேல்நிலை பாடத் தில் 2022ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கியத்திலும் நாட கத்திலும் இளையர்களின் ஆர் வத்தைத் தூண்டுவதுடன் நமது முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளை அங்கீகரிப்பதே இந் நாடகத்தின் முதன்மை நோக்கங் களாகும். கோபாலசாமி வேலைக்காகச் சிங்கப்பூருக்கு வந்திருந்தார். அவருடைய மகள் செல்வி சிங்கப் பூரிலிருக்கும் சுந்தரைக் காதலிக்கி றாள், ஆனால் கோபாலசாமி அவளை இந்தியாவிலிருக்கும் அவரின் அக்கா மகன் மகா தேவனுக்குத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். கோபாலசாமி அவர் நம்பியவர்களின் சுய ரூபத்தை அறிவதுடன் செல்வியின் காதலை ஏற்றுக்கொள்வதும் இந்த நாடகத்தின் கருப்பொருளாகும்.

“இந்த நாடகத்தின் மூலம், ஐம்பது வருடங்களுக்கு முன், சிங்கப்பூரிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்களுக்கிடையேயான உறவுகளைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன். “இயக்குநர் நடிப்பு பற்றிய பல நுணுக்கங்களைக் கற்றுகொடுத்து உள்ளார். அதற்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்,” என்று நாடகத்தில் ‘சுந்தர்’ கதாபாத்திர மாக நடித்த திரு செம்பியன் சோமசுந்தரம், 25, கூறினார். குடும்ப ஒற்றுமை, காதலின் உன்னதம், பெற்றோர்=-பிள்ளை உறவு, சிங்கப்பூர்ப் பற்று போன்ற பண்புநெறிகளையும் இந்த நாடகம் அழகாக வர்ணித்தது. மேலும், சிங்­கப்பூரில் பிறந்து வளர்ந்த தமி ழர்களுக்கும் இந்தியா விலிருந்து வந்த தமிழர்களுக்கும் இடையி லுள்ள உறவை மேம்படுத்த இந்த நாடகம் வழிவகுத்தது. ஐந்து சிங்கப்பூர் தமிழர்களும் நான்கு இந்தியா தமிழர்களும் ஒன்றிணைந்து இந்த நாடகத்தில் நடித்தது ஒரு சிறப்பு அம்சமாகும்.

“சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தையும் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த மாணவர்கள் நுழைவுச்சீட்டு விற்பனை, தயாரிப்பு நிர்வாகம், முக ஒப்பனை, ஆடை அலங்காரம், நடிப்பு போன்றவற்றில் பங்களித்தது பாராட்டுக்குரிய அம்சமாகும். “இத்தகைய கூட்டுமுயற்சி இளையர்கள் தங்களது திறன் களை வளர்க்க உதவுகிறது. சிங் கப்பூர் இந்திய நாடகம் மற்றும் குறும்படம் ஆர்வலர்கள் குழு இளையர்களுக்கு வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கும்,” என்று நாடகத்தை இயக்கிய செல்வி டி.பிரியதரிசினி விவரித்தார். நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த திரு அருண் வாசுதேவ் கிருஷ் ணன், 25, “வானொலி நாடகத் திற்குப் புத்துயிர் ஊட்டியுள்ளார் சலீம் ஹாடி. நடிப்புடன் சிரிப்பும் கூடவே எதிர்பாரா நடனமும் புத் தாக்கச் சிந்தனையை வலியுறுத்து கின்றன.

“கறுப்பு வெள்ளை எழுத்து களைச் சித்திரிக்கும் வண்ணம் அமைந்த மேடை அலங்காரமும் அதில் அழகாக வண்ண உடை களில் பவனி வந்த கதாபாத்திரங் களும் மிகச் சிறப்பு. இப்படைப்பு உள்ளூர் நாடகக் கலைக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது,” என்று கூறினார்.

குட்மன் கலை நிலையத்தில் அரங்கேறிய ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’ நாடகத்தின் ஒரு காட்சி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon