முயிஸின் பொன்விழாக் கொண்டாட்டம்

இர்ஷாத் முஹம்மது

முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 'அவர் தெம்பனிஸ் ஹப்' நிலையத்தில் 'சலாம் சிங்கப் பூர்' எனும் சமூக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூகத்திற்கும் முயிஸிற்கும் இடையிலான நீண்டகால பங்கா ளித்துவத்தைக் கொண்டாடும் விதமாக அடுத்த மாதம் ஏழாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை விழா நடைபெறவுள்ளது. பள்ளிவாசல், வகஃப் எனப் படும் பள்ளிவாசல்களின் சொத்து கள், ஹலால், புனித ஹஜ் யாத் திரை என இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த வெவ்வேறு அம்சங்கள் குறித்த மெய்நிகர் அனுபவத்தைப் பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்து கண்டு அறிந்துகொள்ள முடியும். இஸ்லாமிய சமூகத்துடன் மட்டுமின்றி சிங்கப்பூர் சமூகத்தி னரு டன் முயிஸ் கொண்டுள்ள உறவையும் முயிஸ் கடந்து வந்த பாதையையும் வருகையாளர்கள் தெரிந்துகொள்ளமுடியும். ஐந்து முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த விழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வெவ் வேறு அம்சங்களுக்கும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் 'எடுஃபோரம் 2018' எனும் கல்வி குறித்த கலந்துரையாடல் நடைபெ றும்.

முயிஸ் மன்றத்தின் 50ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இம்மாதத் தொடக்கத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படத்தில் (இடமிருந்து) முஃப்தி டாக்டர் முகமதுஃபத்ரிஸ் பக்கராம், முயிஸ் தலைவர் ஹாஜி அலாமி மூசா, டாக்டர் யாக்கூப் இப்ராஹிம், சுற்றுப்புற, நீர்வள அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, முயிஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹாஜி அப்துல் ரசாக் மரைக்கார். படம்: எஸ்பிஹெச்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!