இன்பாவின் நூல் அறிமுகம்

எழுத்தாளர் இன்பாவின் நான்கு நூல்களின் அறிமுக விழா நாளை 5.1.2019 மாலை 6.30 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடைபெறவுள்ளது. ‘ஞயம் படச் சொல்’ (கவியரங்கக் கவிதைத் தொகுப்பு), ‘ஙப்போல் நிமிர்’ (கவி தைத் தொகுப்பு), ‘மழை வாசம்’ (ஹைக்கூ கவிதை கள்), ‘மூங்கில் மனசு’ (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நான்கு நூல் கள் வெளியிடப்படவிருக்கின்றன. நிகழ்ச்சியில் கவிஞர் ஆண் டாள் பிரியதர்சினி (தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியின் இயக் கு நர்), கவிஞர் தங்கம் மூர்த்தி, அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தார் திரு எஸ்.சுப்பையா ஆகியோருடன் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. தினகரன் கலந்துகொள்கிறார். தொடக்கப் பள்ளி மாணவர் களின் ‘ஹைக் கூவும் குயில்கள்’, தொடக் கக் கல் லூரி மாணவர்க ளின் ‘என் பார் வை யில்’ நூல் விமர் சனமும் இடம்பெறும். அத்துடன் ‘பெண் பாவாய்’ என்னும் அங்கமும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டவுள்ளது.