மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்குகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் அடுத்த மாதம் மாணவர் களுக்கு இரண்டு சிறுகதைப் பயிலரங்குகளை நடத்தவிருக் கிறது. பல்கலைக்கழகம், தொடக் கக் கல்லூரி, புகுமுக வகுப்பு, பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்களுக்கான பயிலரங்கு அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெறும். அந்தப் பயிலரங்கைச் சிறுகதை எழுத்தாளர் திரு. இந்திரஜித் வழிநடத்துவார்.
உயர்நிலை 4, 5 வகுப்புகளின் மாணவர்களுக்கான பயிலரங்கு அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும். அதனைச் சிறுகதை எழுத்தாளரும் தமிழாசிரியருமான திரு. எம். சேகர் வழிநடத்துவார்.
இரண்டு பயிலரங்குகளும் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும்.

இவற்றில் பங்கேற்க கூகல் படிவங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். 
முத்தமிழ் விழாவினை ஒட்டி பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு போட்டிகளுக்கு எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய் துள்ளது. பாலர் வகுப்பு, பல்கலைக் கழகம் தவிர மற்ற போட்டிகள் அனைத்திற்கும் பள்ளிகள், கல்லூரிகள் மூலமே பதிவு செய்ய வேண்டும். அதற்கான கடிதங்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மின் னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன. பாலர் பள்ளி மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டிக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை https://tinyurl.com/MV2019-KG-FancyDress-Contest  என்ற இணையப்பக்கத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம். மேல் விவரங்களுக்கு www.singaporetamilwriters.com இணையத் தளத்தை நாடலாம்.