சமூகத்திற்கு உதவிக்கரம் நீட்டும் தம்பதி 

உதவி செய்யமுடிந்தால் உதவிக் கரம் நீட்டுவோம் என்ற வாழ்க் கைக் கடப்பாட்டைக் கொண்டுள்ள னர் ஓய்வுபெற்ற தாதி திருவாட்டி தேவி எனும் கிருஷ்ணசாமி தனலட்சுமியும் அவரது கணவர் திரு செல்வனும்.
கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரஸ்பிடேரியன் சமூக சேவைகள் அமைப்பில் மூத்த நட்புறவாளராகச் சேர்ந்தார் 68 வயது திருவாட்டி தேவி.
புக்கிட் திமா வட்டாரத்தில் உள்ள முதியோர்களுடன் நட்புறவு கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதில் கூடுதல் கவனமும் மிகுதியான ஆர்வமும் கொண்டுள்ளார் அவர்.  
வயதான காலத்தில் தனிமை யால் பாதிக்கப்படும் முதியோர்கள் பலர் உள்ளனர். தங்கள் பிள் ளைகளின் வேலை காரணமாகவோ இதர பல சூழ்நிலைகள் காரண மாகவோ தனிமை என்பது இயல் பான ஒன்றாகிவிடுகிறது. 
ஆனால் இதுபோன்ற சூழ்நிலை யால் பாதிப்படையும் முதியோர் களைத் தனிமையிலிருந்து மீட்பதே சமூக நட்புறவுத் திட்டத்தின் நோக்கமாகும். 
தனிமையால் பாதிக்கப்படும் இந்த முதியோருக்கு உதவும் தொண்டூழியர்களும் முதியோர் தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 
அவ்வாறு திருவாட்டி தேவியின் நட்புறவால் பலனடைந்தவர் திருவாட்டி ஜான்சன் ரீட்டா ஆனா. 75 வயதாகும் திருவாட்டி ஜான் சனின் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் திருவாட்டி தேவி அவருடன் பேசி கலந்துறவாடு வதுடன் அவரது வீட்டைச் சுத்தம் செய்தும் பங்காற்றுகிறார். 

சரியான நேரத்திற்கு மருந்து களை திருவாட்டி ஜான்சன் உட் கொள்கிறாரா வீட்டு வசிப்பிடம் சரிவர இருக்கிறதா என்பது குறித் தும் அவர் உறுதிசெய்கிறார். 
வசிப்பிடம் முதியோருக்கு ஏற்ற தாக இருக்கவேண்டும் என்றும் நடமாட்டத்திற்கு இடையூறாக இருப்பதால் எளிதில் தடுமாறி கீழே விழும் அளவிற்கு எந்த பாதகமும் இல்லாமல் இருக்கும் நிலையை ஏற்படுத்தித் தரவேண் டும் என்றும் திருவாட்டி தேவி நம்புகிறார். 
முதியோர் நடவடிக்கை நிலை யத்தின் மூலம் அவர் வழங்கும் இந்தச் சேவையால் அவரால் தம்மையும் தமது நண்பர்களையும் இளமையாக வைத்திருக்க முடிகி றது என்கிறார் 46 ஆண்டுகளாகத் தாதியாகப் பணியாற்றி 2015ல் ஓய்வுபெற்ற திருவாட்டி தேவி.
முதுமைப் பருவத்திலும் தமது உடலின் உறுதியாலும் திடமான உடல் செயல்பாடுகளாலும் தம்மால் சமூகத்திற்கு ஏதோ ஒரு வழியில் பங்களிக்க முடிகிறது என்பதை எண்ணி அவர் பெருமை கொள் கிறார். 
புக்கிட் திமா பகுதியில் அமைந் துள்ள பிரஸ்பிடேரியன் சமூக சேவைகள் முதியோர் நடவடிக்கை நிலையத்தின்மூலம் சமூக நட்புற வுத் திட்டத்தை மேற்கொள்ளும் திருவாட்டி தேவி ஒரு வாரத்திற்கு இரு முறை முதியோர்களைச் சந்திக்க கிளமெண்டி, டோ யி டிரைவ் போன்ற பகுதிகளுக்குச் செல்கிறார். 
நமது குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள முதியோர்களை, குறிப்பாகத் தனிமையில் வாழும் முதியோர்கள் யார் என்பதை அறிந்து அவர்களு டன் நட்பை வளர்த்துகொள்வது மனநிறைவைத் தரும் உன்னத செயலாகும் என்பது அவரது எண்ணம். 
சிங்கப்பூரில் மக்கள்தொகை மூப்படைந்துவரும் வேளையில் முதியோர்களில் பலர் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். அவர்களது தேவைகளும் மாறிவரும். மூத்த தொண்டூழியர்களே மற்றவர் களுக்கு உதவிக்கரம் நீட்டும் இது போன்ற திட்டத்தால் வயதான காலத்தை இன்பத்துடன் கழிக்க இயலும். 
சமூக நட்புறவுத் திட்டத்தால் முதியோரிடையே பிணைப்பு வலுப் படுகிறது. அவர்கள் இளமையாக இருப்பதாகவும் உணர்வு ஏற்படும்.  
சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை யும் துடிப்பான மூப்படைதலும் இந்தத் திட்டத்தால் ஏற்படும் பயன் கள் என்றால் அது மிகையல்ல. 

முக்கிய குறிப்புகள்:
சிங்கப்பூர் முழுவதும் 17 சமூக அமைப்புகளால் நடத்தப்படும் சமூக நட்புறவுத் திட்டத்தில் சேர விரும்புவோர் www.moh.gov.sg/befriendasenior எனும் இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது 1800 650 6060 எனும் தொலைபேசி எண் மூலம் சிங்கப்பூர் சில்வர் லைனை பொதுவிடுமுறைகளைத் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொள்ளலாம். 
2019-02-25 06:00:00 +0800ளுள் ஒருவர் 75 வயது திருவாட்டி ஜான்சன் ரீட்டா ஆனா (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓய்வுபெற்ற தாதி திருவாட்டி தேவி, 68 வயது (இடது) சமூக நட்புறவுத் திட்டத்தின் மூலம் பல முதியோருடன் நட்புறவு கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்கிறார். அவர்களுள் ஒருவர் 75 வயது திருவாட்டி ஜான்சன் ரீட்டா ஆனா (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!