முதுமைப் பருவத்திலும் துடிப்பான வாழ்வு

அழகுச் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்த 70 வயது திருவாட்டி பிரிம்லா சாக்செனா சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திறன் மேம்பாடு கண்டு தமது வாழ்க்கைத் தொழிலையே மாற்றினார்.
கடந்த பல ஆண்டுகளாகத் தமது ஓவியத் திறனை வளர்த்து கொள்ள பல பயிற்சி வகுப்புகளுக் குச் சென்றுள்ளார்.
குறிப்பாக நாஃபா எனும் நன்யாங் நுண்கலைக் கழகத்திலும் லாசால் கலைக் கல்லூரியிலும் அவர் தமது பயிற்சிகளை மேற் கொண்டுள்ளார்.
ஓவியக் கலையில் பயிற்சிப் பெற்று வரும் திருவாட்டி பிரிம்லா, தற்போது தமது ஓவியங்களைக் கண்காட்சிகளில் விற்றுவருகிறார்.
மிகுந்த மகிழ்ச்சியில் மனநிறை வுடன் தமது புதிய வாழ்க்கைத் தொழிலில் ஈடுபட்டு வரும் அவர், முதியோர் பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை.

"வயதாகிவிட்டால் முடங்கி வீட்டில் உட்காருவதோ ஒன்றும் செய்யாமல் இருப்பதோ சிறந்த பழக்கம் இல்லை. முடிந்த வரை நம்மை துடிப்புடன் வைத்துக் கொள்ளவேண்டும்," என்று உற்சாகத்துடன் கருத்துரைத்தார் திருவாட்டி பிரிம்லா.
தமது அறுபதாம் வயதில் புதிய திறன்களைக் கற்று புதிய பணியைத் தொடங்கிய அவர், இளையர்களுக்கும் ஓர் நல்ல முன்மாதிரி.
மாறிவரும் பொருளாதாரச் சூழ லில் செழித்தோங்க ஒருவர் புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக் கொள்வது இன்றியமையாதது. அந்த வகையில் வயது வரம்பின்றி வாழ்நாள் கற்றலில் துடிப்புடன் ஈடுபடுவதன் மூலம் பணியிலும் வாழ்விலும் வளர்ச்சிக் காணலாம்.
அந்த வரிசையில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப் பட்ட தேசிய முதியோர் பயிற்சிக் கழகம் மூத்த சிங்கப்பூரர்களுக்குப் பல்வேறு கற்றல் வகுப்புகளை வழங்கி வருகிறது.

பலதரப்பட்ட திறன் மேம்பாட்டு வகுப்புகள் தேசிய முதியோர் பயிற்சிக் கழகத்தால் வழங்கப்படு கிறது.
தொழில்நுட்பக் கல்விக் கழகங் கள், பலதுறைத் தொழிற்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள், கலைக் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட உயர் கல்விக் கழகங்களுடனும் சமூக அமைப்புகளுடனும் சேர்ந்து முதி யோரின் அடிப்படைத் தேவை களுக்குப் பொறுத்தமான பாடங் களை வழங்குகின்றன.
தகுதியுடைய முதியோர் இந்தப் பாடங்களில் சேர்ந்து கட்டணக் கழிவுடன் பயிலமுடியும்.

திருவாட்டி பிரிம்லாவும் இந்த முதியோர் பயிற்சிக் கழகத்தின் வகுப்புகளில் ஆர்வத்துடன் பங்கு பெற்றுவருகிறார். இதுவரை ஓவி யம் தொடர்பான மூன்று பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டார். அவர் படிப்படியாக மேலும் பல வகுப்புகளுக்குச் செல்ல மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.
'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' திட்டம் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை முறையே திறன் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி உள்ளார் அவர். மேலும் பல வகுப் புகளுக்குச் செல்ல அவர் தயாராக இருக்கிறார்.

சீன ஓவியங்களையும் அழகா கத் தீட்டி அதை அண்மையில் விற்றுள்ளார் திருவாட்டி பிரிம்லா.
நான்கு பிள்ளைகளுக்குத் தாயாகவும் நான்கு பேரக்குழந்தை களுக்குப் பாட்டியாகவும் உள்ள திருவாட்டி பிரிம்லா, தமது கணவருடன் வாழ்ந்துவருகிறார்.
தமது கணவரும் 'கோல்ஃப்' விளையாட்டு மூலம் துடிப்புடன் இருப்பதாக திருவாட்டி பிரிம்லா கூறினார்.
முதியோரின் துடிப்பான முதுமைக் காலத்திற்கு அரசாங்கம் பல திட்டங்களைக் கொண்டு வரு வது குறித்து மிகுந்த மனநிறை வைத் தெரிவித்த அவர், முதியோர் கள் தங்களுக்கு விருப்பமான துறைகளிலும் அம்சங்களிலும் தங்களை ஈடுபடுத்தி சிறப்பான வாழ்க்கையை வாழவேண்டும் என சக முதியோருக்கு அவர் கூற விரும்புகிறார்.

சக முதியோருக்கு மட்டுமல்லாமல் இளையர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார் 70 வயது திருவாட்டி பிரிம்லா சாக்செனா. தமது அறுபதாம் வயதில் புதிய திறன்களை வளர்த்துகொண்டு அழகுச் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றிய இவர், இன்று ஓவியக் கலையில் தம்மை ஈடுபடுத்தி வருகிறார். பலவகை ஓவியங்களைத் தீட்டி கண்காட்சிகளில் பங்குபெற்று ஓவியங்களை விற்றும் வருகிறார். தமது திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி தேசிய முதியோர் பயிற்சிக் கழகம் நடத்தும் வகுப்புகளில் பங்குபெற்றுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!